Home Featured நாடு மலேசியாவிற்கான அமெரிக்கத் தூதர் கமலா பத்துமலையில் வழிபாடு!

மலேசியாவிற்கான அமெரிக்கத் தூதர் கமலா பத்துமலையில் வழிபாடு!

1218
0
SHARE
Ad

Kamalaகோலாலம்பூர் – மலேசியாவிற்கான அமெரிக்கத் தூதராக நியமனம் செய்யப்பட்டுள்ள கமலா லக்திர் கடந்த வாரம் மலேசியாவிற்கு வந்து தனது பணிகளைத் துவங்கினார்.

இதனை கோலாலம்பூரில் உள்ள அமெரிக்கத் தூதரகம் உறுதிப்படுத்தியுள்ளது. இந்நிலையில், சில தினங்களுக்கு முன்பு பத்துமலை சென்ற கமலா அங்கு ஸ்ரீ சுப்ரமணியர் சுவாமி ஆலயத்தில் வழிபாடு நடத்தினார்.

அமெரிக்கத் தூதரக இணையதளத்தின் படி, கமலா லக்திர் நியூயார்க்கின் புரூக்லினில் பிறந்தவர். கடந்த 2007-ம் ஆண்டு தேசிய போர் கல்லூரியில் முதுகலைப் பட்டம் பெற்றவர்.  கடந்த 2011-ம் ஆண்டு முதல் 2015-ம் ஆண்டு வரையில், அரசியல் விவகாரங்களுக்கான செயலகத்தில் நிர்வாக உதவியாளராகப் பணியாற்றினார். கடந்த 2009-ம் ஆண்டு முதல் 2011-ம் ஆண்டு நவம்பர் வரை வடக்கு ஐயர்லாந்தின் பெல்பாஸ்ட்டில் அமெரிக்கத் தூதராகப் பணியாற்றினார்.

#TamilSchoolmychoice

மேலும், 2007-ம் ஆண்டு முதல் 2009-ம் ஆண்டு வரை கிழக்கு ஆசியா மற்றும் பசிபிக் விவகாரங்களுக்கான தேசியப் பிரிவைச் சேர்ந்த தென்கிழக்கு ஆசிய கடற்படை அலுவலகத்தின் இயக்குநராகப் பணியாற்றினார். அப்பொறுப்பு பிலிப்பைன்ஸ், இந்தோனிசியா, மலேசியா, சிங்கப்பூர், புரூனே மற்றும் திமோர் ஆகியவற்றுடனான அமெரிக்க நட்புறவு சம்பந்தமானது ஆகும்.

அதோடு, ரியாத், ஜகார்த்தா உள்ள அமெரிக்கத் தூதரகங்களிலும் கமலா பணியாற்றியுள்ளார்.