Home Uncategorized தடுப்புச் சுவர் : மெக்சிகோ பொருட்களுக்கு 20% வரி விதிப்பு!

தடுப்புச் சுவர் : மெக்சிகோ பொருட்களுக்கு 20% வரி விதிப்பு!

787
0
SHARE
Ad

donald-trump

வாஷிங்டன் – அதிபராகப் பதவியேற்ற முதல் டொனால்ட் டிரம்ப் அதிரடியான உத்தரவுகளைப் பிறப்பித்து வருகின்றார்.

பிரச்சாரங்களின்போது தான் கூறியவை எல்லாம் வெறும் பிரச்சார யுக்திகள் அல்ல என்பதைக் காட்டும் வண்ணம், டிபிபிஏ எனப்படும் பசிபிக் நாடுகளுக்கிடையிலான வணிக ஒப்பந்தத்திலிருந்து அமெரிக்கா விலகுவதாக அறிவித்தவர், மெக்சிகோ எல்லைப் பகுதியில் சட்டவிரோதக் குடியேற்றத்தைக் கட்டுப்படுத்துவதற்காக தடுப்புச் சுவர் எழுப்பப்படும் என்றும் அறிவித்திருக்கிறார்.

#TamilSchoolmychoice

பிரச்சாரங்களின்போது, மெக்சிகோ இடையிலான தடுப்புச் சுவருக்கான செலவினங்களுக்கு மெக்சிகோவையே பணம் செலுத்த வைப்பேன் என்றும் டிரம்ப் கூறியிருந்தார்.

அதற்கேற்ப, தடுப்புச் சுவர் செலவினங்களுக்காக மெக்சிகோவிலிருந்து அமெரிக்காவுக்குள் நுழையும் பொருட்களுக்கு 20% கூடுதல் வரிவிதிப்பு விதிக்கப்படலாம் என டிரம்ப் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

அதே வேளையில் மற்ற சில மாற்று வழிகளையும் டிரம்ப் ஆராய்ந்து வருகிறார் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. காரணம், இந்த புதிய வரி விதிப்பினால், அமெரிக்கர்களே அதிகம் பாதிக்கப்படுவார்கள் என சில தரப்புகள் வலியுறுத்தி வருகின்றன.