Home Featured இந்தியா கோவாவில் பாஜக ஆட்சி! உச்ச நீதிமன்றத்தில் வழக்கு!

கோவாவில் பாஜக ஆட்சி! உச்ச நீதிமன்றத்தில் வழக்கு!

681
0
SHARE
Ad

manohar-parrikarபுதுடில்லி – இன்று செவ்வாய்க்கிழமை கோவா மாநிலத்தில் ஆட்சி அமைக்கும் பாஜகவின் முடிவுக்கு எதிராக காங்கிரஸ் கட்சி உச்ச நீதிமன்றத்தில் அவசர வழக்காகத் தொடுத்திருக்கும் வழக்கை உச்ச நீதிமன்றம் விசாரிக்கவிருக்கிறது.

கோவா முதல்வராக மனோகர் பாரிக்கர் பதவியேற்பதை தடுத்து நிறுத்தும் காங்கிரசின் முயற்சியாகப் பார்க்கப்படும் இந்த வழக்கை உச்ச நீதிமன்றம் இன்று செவ்வாய்க்கிழமையே செவிமெடுக்கும்.

40 தொகுதிகளைக் கொண்ட கோவா மாநிலத்தில் 17 தொகுதிளை காங்கிரஸ் கட்சி வென்றிருக்கிறது. 13 தொகுதிகளில் மட்டுமே பாஜக வெற்றி பெற்றுள்ளது. மற்ற கட்சிகள் 10 தொகுதிகளைப் பெற்றிருக்கின்றன.

#TamilSchoolmychoice

இந்நிலையில் அதிகத் தொகுதிகளைப் பெற்றுள்ள காங்கிரஸ் கட்சியை ஆட்சி அமைக்க அழைக்காமல், இரண்டாவதாகப் பெரும்பான்மை பெற்ற பாஜக கட்சியை ஆட்சி அமைக்க ஆளுநர் அழைத்திருப்பதைக் காங்கிரஸ் கட்சி வன்மையாகக் கண்டித்திருக்கிறது.

காங்கிரசின் முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம் இது குறித்து கருத்துரைத்தபோது, இரண்டாவது நிலையிலுள்ள கட்சியை ஆட்சி அமைக்க அழைப்பது முறையற்றது எனச் சாடியிருந்தார்.

எனினும், கோவாவில் உள்ள மற்ற சிறிய கட்சிகள் தற்காப்பு அமைச்சராக இருந்த மனோகர் பாரிக்கர் கோவா முதல்வராகப் பதவியேற்பதையே ஆதரிக்கின்றன.

இந்த சூழலில்தான் பரபரப்பான இந்த வழக்கை காங்கிரஸ் கட்சி உச்ச நீதிமன்றத்தில் தொடுத்திருக்கிறது.