Home கலை உலகம் அஜீத் நடிக்கும் புதிய படத்தின் பெயர் ‘வெற்றிகொண்டான்’!

அஜீத் நடிக்கும் புதிய படத்தின் பெயர் ‘வெற்றிகொண்டான்’!

686
0
SHARE
Ad

ajith-சென்னை, மார்ச்.22- அஜீத் நடிக்கும் புதிய படத்திற்கு ‘வெற்றிகொண்டான்’ எனும் தலைப்பு தேர்வு செய்யப்பட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

அஜீத் இப்போது விஷ்ணுவர்த்தன் இயக்கும் வலை படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். இதன் படப்பிடிப்பு மும்பையில் நடந்து வருகிறது. இந்தப் படத்திற்கு பிறகு சிறுத்தை இயக்குனர் சிவா இயக்கும் புதிய படத்தில் நடிக்கிறார்.

இதில் அஜீத்துக்கு ஜோடியாக தமன்னா நடிக்க இருக்கிறார். தேவிஸ்ரீபிரசாத் இசையமைக்கிறார். படப்பிடிப்பு விரைவில் தொடங்க இருக்கிறது. இதனிடையே அஜீத்-சிவா இணையும் புதிய படத்திற்கு ‘வெற்றிகொண்டான்’ எனும் தலைப்பு தேர்வு செய்யப்பட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்த தலைப்பை வைக்க அஜீத்திடன் அனுமதி வாங்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

#TamilSchoolmychoice

எனவே தலைப்பு குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பினை விரைவில் எதிர்பார்க்கலாம்.