Home Featured உலகம் ‘குண்டுகளுக்கெல்லாம் தந்தை’ எந்த நாட்டிடம் இருக்கிறது தெரியுமா?

‘குண்டுகளுக்கெல்லாம் தந்தை’ எந்த நாட்டிடம் இருக்கிறது தெரியுமா?

688
0
SHARE
Ad

MOABவாஷிங்டன் – கடந்த வாரம், ஆப்கானிஸ்தானில் பதுங்கியிருக்கும் ஐஎஸ் தீவிரவாதிகளை அழிக்க, அமெரிக்கா ஜிபியு 43/பி என்ற 10,000 கிலோ எடையுள்ள பயங்கர வெடிகுண்டை, பாகிஸ்தான் எல்லைப் பகுதிக்கு மிக அருகில் இருக்கும் ஆச்சின் மாவட்டத்தைச் சேர்ந்த நாங்கார்ஹார் என்ற பகுதியில் வீசியது.

11 டன்கள் டிஎன்டி-க்குச் சமமாக வெடிக்கக் கூடிய அக்குண்டு, ‘குண்டுகளுக்கெல்லாம் தாய்’ என்றழைக்கப்படுகின்றது. அந்த குண்டு, கடந்த 2003-ம் ஆண்டு, ஈராக் போரின் போது முதன் முதலாக சோதனை செய்து பார்க்கப்பட்டது.

இந்நிலையில், ஜிபியு 43 குண்டை விட 4 மடங்கு அதிபயங்கரமான குண்டு ஒன்று ரஷியாவில் உள்ளதாகத் தகவல்கள் கூறுகின்றன.

#TamilSchoolmychoice

கடந்த 2007-ம் ஆண்டு, ஏடிபிஐபி (Aviation Thermobaric Bomb of Increased Power) என்ற அந்த குண்டை சோதனை செய்து பார்த்தது ரஷியா. 7,000 கிலோ எடை தான் என்றாலும், வெடிப்புத்தன்மையில் 44 டன்கள் டிஎன்டி-க்குச் சமமானது.

இந்த வெடிகுண்டு, “குண்டுகளுக்கெல்லாம் தந்தை” எனப் பெயரிடப்பட்டிருக்கிறது.