Home Featured இந்தியா நிர்பயா வழக்கில் இறுதித் தீர்ப்பு: குற்றவாளிகளுக்கு தூக்கு உறுதியாகுமா?

நிர்பயா வழக்கில் இறுதித் தீர்ப்பு: குற்றவாளிகளுக்கு தூக்கு உறுதியாகுமா?

914
0
SHARE
Ad

film-delhi-gang-rape-647x450புதுடெல்லி – டெல்லி மருத்துவக் கல்லூரி மாணவி நிர்பயா பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில், டெல்லி உச்சநீதிமன்றம் இன்று வெள்ளிக்கிழமை இறுதித்தீர்ப்பு அறிவிக்கவிருக்கிறது.

இவ்வழக்கில் உயர்நீதிமன்றம் வழங்கிய தூக்கு தண்டனையை எதிர்த்து குற்றவாளிகள் 4 பேரும் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர். அவ்வழக்கு இன்று விசாரணைக்கு வருகின்றது.

கடந்த 2012-ம் ஆண்டு புதுடெல்லியில் ஓடும் பேருந்தில் 6 பேர் கொண்ட கும்பலால் கற்பழிக்கப்பட்டு, வெளியே தூக்கி வீசப்பட்ட மருத்துவக் கல்லூரி மாணவி நிர்பயா, சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார்.

#TamilSchoolmychoice

இவ்வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட 6 பேரில் ஒருவர் மைனர் என்பதால் சிறுவர் சீர்திருத்தப்பள்ளி அனுப்பப்பட்டார். மற்றொருவர் சிறையில் தூக்கிலிட்டுத் தற்கொலை செய்து கொண்டார். மற்ற நால்வருக்கு விதிக்கப்பட்ட தூக்கு தண்டனையை, கடந்த 2014-ம் ஆண்டு டெல்லி உயர்நீதிமன்றம் உறுதிசெய்தது குறிப்பிடத்தக்கது.