Home Featured கலையுலகம் ஐ-சிங் மலேசியா 2017: பிரம்மாண்டமான அனைத்துலகப் பாடல் திறன் போட்டி!

ஐ-சிங் மலேசியா 2017: பிரம்மாண்டமான அனைத்துலகப் பாடல் திறன் போட்டி!

1069
0
SHARE
Ad

isingmalaysiaகோலாலம்பூர் – பாடுவதில் ஆர்வமா?, “எனக்கு 16 வயது தான் ஆகுது முடியுமா?”, “எனக்கு 60 வயதாகிவிட்டது இனிமேல் எங்க என்ற தயக்கமா? அந்தச் சிந்தனைகளையெல்லாம் ஓரமாக மூட்டை கட்டி வைத்துவிட்டு, புத்துணர்ச்சியோடு உங்கள் பாடல் திறமையை நிரூபிக்க இதோ புதிய களம் ஒன்று காத்திருக்கிறது.

சிங்கப்பூரைச் சேர்ந்த ‘தி ரிதம்ஸ் மைன்’ என்ற நிறுவனமும், மலேசியாவைச் சேர்ந்த ஆரஞ்சு பாக்ஸ் ஸ்டூடியோ என்ற நிறுவனமும் இணைந்து, ‘ஐ சிங் மலேசியா 2017’  என்ற அனைத்துலக அளவிலான பாடல் திறன் போட்டியை ஏற்பாடு செய்திருக்கிறது.

‘I’ என்பது இண்டர்நேஷனல் அதாவது அனைத்துலக அளவிலான என்பதைக் குறிக்கும் என்றும், ‘Sing’ என்பதுடன் சேர்ந்து அனைத்துலக அளவில் பாடல் திறனை நிரூபிக்கப் போகிறேன் என்ற அர்த்தம் தருவதற்காக இப்பெயர் வைக்கப்பட்டிருப்பதாக ஏற்பாட்டுக் குழு தெரிவித்திருக்கின்றது.

#TamilSchoolmychoice

composerjay1(ஆரஞ்சு பாக்ஸ் ஸ்டூடியோ நிறுவனரும், இசையமைப்பாளருமான ஜெய்)

ஒன்றல்ல இரண்டல்ல, மலேசியா, சிங்கப்பூர், இந்தியா, மியன்மார் என 30-க்கும் மேற்பட்ட நாடுகளைச் சேர்ந்த போட்டியாளர்கள் கலந்து கொள்ளவிருக்கும் இம்மாபெரும் பாடல் திறன் போட்டியில் 16 வயதில் இருந்து 65 வயது வரையிலான பாடகர்கள் கலந்து கொள்ளலாம்.

தனிப்பாடல், டூயட் என இரு பிரிவுகளாக நடைபெறவிருக்கும் இப்போட்டியில் தமிழ், மலாய், ஆங்கிலம், சீன மொழி என நான்கு மொழிகளில் பாடலாம்.

அதற்கு ஏற்ப இப்பாடல் திறன் போட்டியின் நடுவர்களும் பன்மொழிப்புலமை பெற்றவர்களாக இருப்பார்கள் என ஏற்பாட்டாளர்களான  ‘தி ரிதமஸ் மைன்’ நிறுவனர் மைக்கேல் ராஜும், ஆரஞ்சு பாக்ஸ் ஸ்டூடியோ நிறுவனரும், இசையமைப்பாளருமான ஜெய்யும் தெரிவித்தனர்.

தேர்வு முறை

isingmalaysia1(‘தி ரிதமஸ் மைன்’ நிறுவனர் மைக்கேல் ராஜு)

போட்டியில் கலந்து கொள்ளும் பாடகர்களின் குரல்வளம், உச்சரிப்பு, இசைக்கு ஏற்ப தாளம், மேடை படைப்பு மற்றும் ரசிகர்களின் ஆதரவு ஆகியவற்றின் அடிப்படையில் வெற்றியாளர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

தனிப்பாடலில் ஒரு வெற்றியாளரும், டூயட் பாடலில் இரு வெற்றியாளர்களும் தேர்வு செய்யப்பட்டு, யாங்கூனில் வரும் செப்டம்பர் 29-ம் தேதி முதல் அக்டோபர் 1-ம் தேதி வரையில் நடைபெறும் அனைத்துலகப் போட்டியில் பங்கேற்க அனுமதிக்கப்படுவர். அங்கு நடைபெறும் இறுதிப்போட்டியில் வெற்றி பெறும் வெற்றியாளருக்கு 10,000 அமெரிக்க டாலர் பரிசுத்தொகை வழங்கப்படும் என ஏற்பாட்டுக் குழுவினர் அறிவித்திருக்கின்றனர்.

நுழைவுக்கட்டணம்

இப்போட்டியில் பங்கேற்பதற்கு நுழைவுக்கட்டணம் செலுத்த வேண்டும். அதன் படி, மாணவர்களுக்கு  20 ரிங்கிட்டும், இணையம் வழியாகப் பதிவு செய்போருக்கு 30 ரிங்கிட்டும், குரல் தேர்வு அன்று பதிவு செய்வோருக்கு 40 ரிங்கிட்டும் நுழைவுக் கட்டணம் விதிக்கப்படும் என்றும் ஏற்பாட்டுக் குழுவினர் தெரிவித்திருக்கின்றனர்.

குரல் தேர்வு

இந்த போட்டிக்கான குரல் தேர்வு பினாங்கு, ஜோகூர்பாரு, கோலாலம்பூர், ஈப்போ ஆகிய 4 மாநிலங்களில் நடைபெறவிருக்கிறது.

அதன் விவரங்கள் பின்வருமாறு:-

பினாங்கில் 4-6-2017 (ஞாயிற்றுக்கிழமை), காலை 9.00 – 5.00 மணி வரை, முகவரி: YMCA, 211, Jalan Macalister, George Town, Penang.

ஜோகூர்பாருவில் 10-6-2017 (சனிக்கிழமை), காலை 9.00- 5.00 மணி வரை, முகவரி: Tropical Inn, 15, Jalan Gereja, Bandar Johor Bahru, Johor.

கோலாலம்பூரில் 18-6-2017 (ஞாயிற்றுக்கிழமை), காலை 9.00 – 5.00 மணி வரை, முகவரி: Odyssey Vocal and Music Training, 4, Wisma Ajenzi Riaz, Jalan Tun Sambanthan, Brickfield, Kuala Lumpur.

ஈப்போவில் 1-7-2017 (சனிக்கிழமை) காலை 9.00- 5.00 மணி வரை, முகவரி:  MU Hotel, 18, Jalan Chung On Siew, Taman Jubilee, Ipoh, Perak.

இது குறித்த மேல் விவரங்களை https://www.facebook.com/ISingMalaysia/  என்ற ஃபேஸ்புக் பக்கத்தையும், இப்போட்டியில் பங்கேற்க, பதிவு செய்ய http://i-singworld.com/registration-2017/ என்ற இணையப்பக்கத்தையும் நாடலாம்.

படங்கள் – ராஜ்மோகன்