Home உலகம் பூமி நேரம்- பல நாடுகளில் நேற்று அனுசரிக்கப்பட்டது

பூமி நேரம்- பல நாடுகளில் நேற்று அனுசரிக்கப்பட்டது

759
0
SHARE
Ad

earthசிட்னி, மார்ச்.24-  புவி வெப்பமயமாகுதலைக் குறிக்கும் வகையிலும், அதனைத் தடுத்து பூமி தனது சக்தியைப் புதுப்பித்துக்கொள்ளத் துணை புரியும் வகையிலும், நேற்று இரவு 8.30 மணி முதல் தொடர்ந்து 60 நிமிடங்களுக்கு பல உலகநாடுகளில் விளக்குகளை அணைத்து தங்களின் பங்களிப்பைத் தெரிவித்தனர்.

ஆஸ்திரேலியாவைத் தலைமையிடமாகக் கொண்டு, 1961ல் ஆரம்பிக்கப்பட்ட, உலக வனவிலங்குகளின் பாதுகாப்பு நிதி மையம், 1986ஆம் ஆண்டில்  இயற்கை பாதுகாப்பு நிதி மையமாக உருப்பெற்றது.

இது ஒரு அரசு சாரா சர்வதேச அமைப்பாகும். 5 மில்லியன் உறுப்பினர்களைக் கொண்ட இந்த இயக்கம், உலக சுற்றுப்புறசூழல் சீர்கேடு அடைவதைத் தவிர்த்து, இயற்கை வளங்களைக் காப்பது குறித்த முயற்சியில் ஈடுபட்டுள்ளது.

#TamilSchoolmychoice

கடந்த 2007ஆம் ஆண்டு, இந்த இயக்கத்தினரால் ஒரு குறிப்பிட்ட நாளில் குறிப்பிட்ட நேரத்தில் உலக நாடுகள் மின்விளக்குகளைத் தவிர்த்து புவி வெப்பமயமாவதைத் தடுக்கும் விதமாக இத்திட்டம் மேற்கொள்ளப்பட்டது.

பூமி நேரம் என்று அழைக்கப்படும் இந்த நிகழ்ச்சியில் சென்ற வருடம் சுமார் 150 நாடுகள் பங்குபெற்றன. இந்த ஆண்டு, பாலஸ்தீனம், துனிசியா, சுரிநாம், ருவாண்டா போன்ற நாடுகளும் இந்த உறுப்பினர் வரிசையில் இணைந்துள்ளன.

நேற்று, ஆஸ்திரேலியா நாட்டு நேரப்படி இரவு 8.30 மணிக்கு சிட்னி ஒபரா விடுதியில் விளக்குகள் அணைக்கப்பட்டன. இதனைத் தொடர்ந்து ஜப்பானின் டோக்கியோ டவரிலும் அவ்வாறே செய்யப்பட்டது. பார்வையாளர்கள் சைக்கிள் இயந்திரத்தை சுற்றுவதன் மூலம் உண்டான மின்சாரத்தில் விளக்குகள் ஒளியூட்டப்பட்டன.

பாரம்பரிய சின்னமான ஹிரோஷிமா அமைதி நினைவு சின்னமும் இருளில் மூழ்கியது. சீனாவில், பேர்ட்ஸ் நெஸ்ட் என்று அழைக்கப்படும் ஒலிம்பிக் விளையாட்டு மைதானத்திலும் மற்றும் ஷாங்காய் நதிக்கரையில் இருந்த பல விடுதிகளிலும் விளக்குகள் அணைக்கப்பட்டன. ஹாங்காங்கிலும் இந்நிகழ்ச்சி தொடர்ந்தது.

சிங்கப்பூரில் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் இனிய இசை நிகழ்ச்சிக்கேற்ப ஆடிக்கொண்டு நீர்ப்பரப்பில் சென்றவாறு இந்த  பூமிநேரம் நிகழ்ச்சியைத் தங்கள் நாட்டில் கண்டு களித்தனர்.

இந்தியாவிலும் புகழ்பெற்ற குதுப்மினார், ஹுமாயுன் சமாதி, செங்கோட்டை போன்ற இடங்களில் பூமி நேரம் கொண்டாடப்பட்டது. உலகின் புகழ்பெற்ற கட்டிடங்களும், புராதன சின்னங்களும் மட்டுமில்லாமல் அனைத்து நாடுகளிலும் பொதுமக்களில் பெரும்பான்மையானோரும் இந்த நிகழ்ச்சியில் ஆர்வமுடன் பங்கேற்று, சுற்றுப்புற சூழல் குறித்த தங்களின் அக்கறையை வெளிப்படுத்தினர்.