Home Featured நாடு டான்ஸ்ரீ பாலா – அவரது மகன் – தலா 5 இலட்சம் பிணை

டான்ஸ்ரீ பாலா – அவரது மகன் – தலா 5 இலட்சம் பிணை

1539
0
SHARE
Ad

bala-tansri-son-charged-26072017கோலாலம்பூர் – அரசாங்கக் குத்தகை ஒன்றில் 12.8 மில்லியன் ரிங்கிட் பொருட்களை விநியோகித்ததாகப் பொய்க் கணக்கு காட்டியதற்காக நேற்று புதன்கிழமை மஇகாவின் முன்னாள் உதவித் தலைவர் டான்ஸ்ரீ எஸ்.பாலகிருஷ்ணனும் (வயது 63), அவரது மகன் அசோக் குமாரும் (31) அமர்வு (செஷன்ஸ்) நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்பட்டனர்.

ஊழல் தடுப்பு ஆணையம் கொண்டு வந்த இந்தக் குற்றச்சாட்டுகளை மறுத்து இருவரும் விசாரணை கோரியதைத் தொடர்ந்து, இருவருக்கும் தலா 5 இலட்சம் ரிங்கிட் பிணைத் தொகையாக (ஜாமீன்) நீதிமன்றம் நிர்ணயித்தது.

அரசாங்கத்தின் சார்பில் மேற்கொள்ளப்பட்ட ஆறு மறுசீரமைப்பு குத்தகைப் பணிகளுக்காக, வடிகால் மற்றும் நீர்ப்பாசன இலாகாவிடம் சமர்ப்பித்த குத்தகைப் பணக் கோரிக்கையில் பொய்க் கணக்கு காட்டியதற்காக டான்ஸ்ரீ பாலா மற்றும் அவரது மகன் மீது இந்தக் குற்றச்சாட்டுகளை ஊழல் தடுப்பு ஆணையம் கொண்டு வந்தது.

#TamilSchoolmychoice

மஇகா ஜோகூர் மாநிலத்தின் முன்னாள் தலைவரான டான்ஸ்ரீ பாலா, 2013-இல் நடந்த மஇகா கட்சித் தேர்தலில் தேசிய உதவித் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

பின்னர், மஇகாவில் ஏற்பட்ட பிளவைத் தொடர்ந்து, டத்தோஸ்ரீ ஜி.பழனிவேலு அணியில் இணைந்து செயலாற்றி வந்தார்.

படம்: நன்றி – ஸ்டார் இணையத் தளம்