Home நாடு மகாதீரின் தாத்தா யார்? – முக்ரிஸ் விளக்கம்!

மகாதீரின் தாத்தா யார்? – முக்ரிஸ் விளக்கம்!

1014
0
SHARE
Ad

mukrizகோலாலம்பூர் – முன்னாள் பிரதமர் துன் டாக்டர் மகாதீர் முகமது, இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர் என்று துணைப் பிரதமர் டத்தோஸ்ரீ அகமட் சாஹிட் ஹமீடி அம்பலப்படுத்திய விவகாரம் தற்போது அரசியல் வட்டாரங்களில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது.

தான் இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவராக இருந்தாலும் கூட, தான் ஒரு மலாய்க்காரரே என மகாதீர் கூறிவந்தாலும் கூட, இந்த விவகாரம் மீண்டும் மீண்டும் சர்ச்சைக்குள்ளாக்கப்பட்டு வருகின்றது.

இதனிடையே, மகாதீரின் மகனான டத்தோஸ்ரீ முக்ரிஸ் மகாதீர் இது குறித்து அளித்திருக்கும் விளக்கத்தில், துன் டாக்டர் மகாதீரின் தந்தையார் பெயர் முகமது என்றும், மகாதீரின் தாத்தாவின் பெயர் தான் இஸ்கண்டார் குட்டி என்றும் தெரிவித்திருக்கிறார்.

#TamilSchoolmychoice

மேலும், “இஸ்கண்டார் குட்டி என்பவர் பிரிட்டிஷ் ஆட்சி காலத்தில் இந்தியாவில் இருந்து வேலைக்காக மலேசியாவிற்கு வந்தவர் தான். ஆங்கில மொழி போதிக்கும் ஆசிரியராகப் பணியாற்றினார். பின்னர் ஜோகூரைச் சேர்ந்த சித்தி ஹாவா என்பவரை இஸ்கண்டார் மணம் முடித்தார். 1881-ம் ஆண்டு பினாங்கில் மகாதீரின் தந்தையான முகமட் பிறந்தார். அவர் கெடாவைச் சேர்ந்த தெம்பாவான் பிந்தி வான் ஹனாபி என்பவரை மணந்து கொண்டார். இந்த தம்பதிக்குப் பிறந்தவர் தான் மகாதீர்” என்று முக்ரிஸ் தெரிவித்திருக்கிறார்.