Home நாடு பினாங்கு ஆட்சிக் குழு உறுப்பினர் பூன் போ விடுதலை

பினாங்கு ஆட்சிக் குழு உறுப்பினர் பூன் போ விடுதலை

720
0
SHARE
Ad

Phee Boon Pohஜோர்ஜ் டவுன் – ஊழல் குற்றச்சாட்டுகள் தொடர்பில் கைது செய்யப்பட்ட பினாங்கு மாநில ஆட்சிக் குழு உறுப்பினர் பீ பூன் போ உயர் நீதிமன்றத்தால் விடுதலை செய்யப்பட்டிருக்கிறார்.

அவருக்கு எதிராக மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் கீழ்நிலை (மாஜிஸ்ட்ரேட்) நீதிமன்றத்தில் பெற்ற தடுப்புக் காவல் உத்தரவை உயர் நீதிமன்றம் இரத்து செய்து நேற்று தீர்ப்பு வழங்கியது.

இருப்பினும், இந்தத் தீர்ப்பு தங்களுக்கு திருப்தியளிக்கவில்லை என்றும் அதற்கு எதிராக மேல்முறையீட்டு நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யப் போவதாகவும் ஊழல் தடுப்பு ஆணையம் தெரிவித்தது.

#TamilSchoolmychoice

பூன் போவும், ஒரு தொழிற்சாலை இயக்குநரான எட்மண்ட் கான் இயூ லியோங் மற்றும் 70 வயதான அவரது தந்தையும் தொழிற்சாலை நிர்வாகியுமான கான் பக் ஹீ ஆகிய மூவரும் கடந்த வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டு ஐந்து நாட்கள் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டனர்.

புக்கிட் மெர்தாஜமில் ஒரு சட்டவிரோதத் தொழிற்சாலைக்கு அனுமதி வழங்கியது தொடர்பில் அவர்கள் கைது செய்யப்பட்டு விசாரிக்கப்பட்டனர்.

கைது செய்யப்பட்டவர்கள் தடுப்புக் காவலின்போது தங்களின் வழக்கறிஞர்களைச் சந்திக்க அனுமதி மறுக்கப்பட்டிருப்பதால் அவர்களின் தடுப்புக் காவல் ஆணை இரத்து செய்யப்படுகிறது என நீதிபதி அப்துல் வகாப் தனது தீர்ப்பில் தெரிவித்திருக்கிறார்.

நீதிமன்றத்தால் விடுதலை செய்யப்பட்ட அவரை வரவேற்க பினாங்கு முதல்வர் லிம் குவான் எங்கும், ஜசெக தலைவர் லிம் கிட் சியாங்கும் நேரில் வருகை தந்தனர்.

தான் எந்தக் குற்றமும் செய்யவில்லை என்றும், தொடர்ந்து பினாங்கு மாநில அரசாங்கத்தின் வாயிலாக தனது சேவைகளைத் தொடரப் போவதாகவும் பூன் போ தெரிவித்திருக்கிறார்.