Home நாடு கெடா ஆனந்தன் செனட்டரானார்!

கெடா ஆனந்தன் செனட்டரானார்!

855
0
SHARE
Ad

s.ananthanஅலோர் ஸ்டார் – கெடா மாநில மஇகா துணைத்தலைவரான டத்தோ எஸ்.ஆனந்தன் நாடாளுமன்ற மேலவை உறுப்பினராக நியமிக்கப்பட கெடா சட்டமன்றம் இன்று முன்மொழிந்தது.

நாடாளுமன்ற மேலவையில் ஒவ்வொரு மாநிலத்தின் சார்பிலும் இரண்டு செனட்டர்கள் நியமிக்கப்படுவார்கள்.

தேசிய முன்னணியின் சார்பில் அம்னோ பிரதிநிதியாக ஒரு செனட்டரும், மற்ற கட்சிகளின் பிரதிநிதியாக ஒருவரும் நியமிக்கப்படுவது வழக்கமாகும்.

#TamilSchoolmychoice

அந்த வகையில், இந்த முறை கெடா மாநிலம் சார்பிலான செனட்டர் பதவி மஇகா-விற்கு வழங்கப்பட்டிருக்கிறது.

மஇகா சார்பாக டத்தோ எஸ்.ஆனந்தன் செனட்டராகப் பதவி ஏற்கிறார்.