Home நடந்த நிகழ்ச்சிகள் 1,000 பேருக்கு டாக்சி பெர்மிட்டுகள்- புதிய கார்களை வாங்க வெ.5,000 ரொக்கம்

1,000 பேருக்கு டாக்சி பெர்மிட்டுகள்- புதிய கார்களை வாங்க வெ.5,000 ரொக்கம்

786
0
SHARE
Ad

najib-tun-razakபுத்ராஜெயா, மார்ச்25- தனிநபர் டாக்சி பெர்மிட் பெறும் சுமார் ஆயிரம் பேர், புரோட்டன் எக்ஸ்சோரா எம்பிவி (EXORA MPV) வாகனத்தை வாங்குவதற்கு 5 ஆயிரம் வெள்ளி ரிங்கிட் மானியத்தை பெறுவார்கள் என்று பிரதமர் டத்தோ  ஸ்ரீ  நஜிப் துன் ரசாக் நேற்று தெரிவித்தார்.

தனிநபர் உரிமத்தை பெறும் டாக்சியோட்டிகள் அனைவரும் இந்த எம்பிவி வகை வாகனத்தை கட்டாயம் வாங்க வேண்டும் என்று பிரதமர் வலியுறுத்தினார்.

டாக்சியோட்டிகள் பயணிகளின் வசதிக்காக தங்களின் வாகனங்களை உறுதி செய்வதில் அரசாங்கம் கொண்டிருக்கும் மற்றொரு கடப்பாடே இது என்று புத்ராஜெயா அனைத்துலக மாநாட்டு மையத்தில் தனிநபர் டாக்சி உரிமம் வழங்கும் நிகழ்ச்சியில் உரை நிகழ்த்துகையில் பிரதமர் குறிப்பிட்டார்.

#TamilSchoolmychoice

இந்த நிகழ்ச்சியில் முதற்கட்டமாக 200 பேருக்கு தனிநபர் டாக்சி உரிமங்களை நேரிடையாக வழங்கினார். எஞ்சிய டாக்சியோட்டிகளுக்கான உரிமங்களை தரை பொது போக்குவரத்து  ஆணையம் (ஸ்பேட்) எடுத்து  வழங்கும் என்று அவர் கூறினார்.

இந்த டாக்சி ஓட்டுநர்கள் கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையத்திற்கும் (கேஎல்ஐஏ) மற்றும் இதர இடங்களுக்கும் பயணிகளை ஏற்றிச் செல்லலாம் என்று நஜிப் கூறினார். இது அரசாங்கத்தின் மற்றொரு வாக்குறுதிகளை நிறைவேற்றும் திட்டமாகும். காரணம் டாக்சி ஓட்டுநர்களின் குடும்ப வருமானத்தையும் அவர்களது எதிர்காலத்தையும் பேணிக்காக்கும் கடமை அரசாங்கத்திற்கு உண்டு என்று அவர் சொன்னார்.

மேற்கண்ட உதவிகளைப் பெறும் டாக்சி ஓட்டுநர்கள் நேர்மையுடனும், பணிவுடனும் நடந்து கொண்டு அரசாங்கத்திற்கு நற்பெயரை ஏற்படுத்திக்கொடுப்பதோடு நேரம் வரும் போது அரசாங்கத்திற்கு தங்களது நன்றியைச் செலுத்த மறந்துவிடக் கூடாது என்றார்.

அரசாங்கம் இதற்கு முன்பு ஒரே மலேசியா மக்கள் உதவி தொகை (பிரிம் 2.0) என நாட்டு மக்களுக்கு பல்வேறு வசதிகளைச் செய்துள்ளது. அரசாங்கம் பிரிம் 1.0, 2.0. 3.0 என பல்வேறு உதவித் தொகைகளை நாட்டு மக்களுக்கு வழங்கி வருகிறது. ஆனால், எதிர்க்கட்சிகள் பெர்சே1.0, பெர்சே2.0 என ஆங்காங்கே பேரணியை நடத்தி வருவதாகவும் பிரதமர் சொன்னார்.

தொடர்ந்து டாக்சியோட்டிகளுக்கான 5,000 வெள்ளி மானியம் குறித்து பேசிய அவர், இவர்கள் சொந்த வாகனங்களைக் கொண்டிருப்பதற்கு இது உதவும் என்று மேலும்  கூறினார். தரை போக்குவரத்து ஆணையம் கூடிய விரைவில் ஒரே மலேசியா மக்கள் டாக்சி திட்டத்தையும் தொடக்கவுள்ளதாக அறிவித்த பிரதமர், அதன்வழி நாட்டிலுள்ள 76,000 டாக்சி ஓட்டுநர்கள் பயனடைவார்கள் என்று தெரிவித்தார்.