Home நாடு மகாதீர், வேதமூர்த்தி சந்திப்பு: எதிர்கட்சியில் ஹிண்ட்ராப் இணையுமா?

மகாதீர், வேதமூர்த்தி சந்திப்பு: எதிர்கட்சியில் ஹிண்ட்ராப் இணையுமா?

714
0
SHARE
Ad

Mahathir-Waythamoorthyகோலாலம்பூர் – கூட்டணி அமைப்பது குறித்த பேச்சுவார்த்தைக்காக முன்னாள் பிரதமர் துன் டாக்டர் மகாதீர் முகமது, ஹிண்ட்ராப் தலைவர் பி.வேதமூர்த்தியை நேற்று வியாழக்கிழமை சந்தித்தார்.

பெர்டானா தலைமைத்துவ அறக்கட்டளையில் இச்சந்திப்பு நடைபெற்றதாக எஃப்எம்டி கூறுகின்றது.

“ஹராப்பானில் இந்திய சமுதாயத்தின் பங்கு அவ்வளவு அதிகமாக இல்லை. அதில் ஓர் இந்தியக் கட்சியே இல்லை. பல்லினக் கட்சிகளில் இந்தியர்களும் உள்ளனர். ஆனால் அதில் பிரநிதிப்பவர்கள் குறைவு”

#TamilSchoolmychoice

“ஹிண்ட்ராப் சாதாரண இந்தியர்களின் ஆதரவைப் பெற்றிருப்பதற்கு நாங்கள் பாராட்டவேண்டும் என்று நினைக்கிறேன். அதில் இணைந்திருப்பவர்கள் வழக்கறிஞர்களோ அல்லது மருத்துவர்களோ கிடையாது. சாதாரண தோட்டப்புற மக்கள்”

“எனவே ஹிண்ட்ராப்புடன் நாங்கள் வேலை செய்கிறோம். ஹராப்பானில் அது ஒரு உறுப்பினராக இல்லாத பட்சத்தில், எதிர்கட்சிகளில் ஒரு கட்சியாக இருக்கட்டும்” என்று மகாதீர் கூறியிருக்கிறார்.

மேலும், கிராமப்புற மக்களின் ஆதரவைப் பெறுவதற்கு ஹிண்ட்ராப், எதிர்கட்சிகளுக்கு உதவும் என்று தான் நம்புவதாக மகாதீர் தெரிவித்திருக்கிறார்.