Home நாடு மலேசியர்கள் எவ்வளவு பொறுப்பானவர்கள்? – மின்னலின் சிறப்புக் காணொளி!

மலேசியர்கள் எவ்வளவு பொறுப்பானவர்கள்? – மின்னலின் சிறப்புக் காணொளி!

861
0
SHARE
Ad

MinnalFM1கோலாலம்பூர் – மின்னல் எப்எம் வானொலியில் தேசிய தின மாதத்தையொட்டி பல சிறப்பு நிகழ்ச்சிகள் ஒலியேறி வருகின்றன.

அந்த வகையில், தயாரிப்பாளர் பிரேமா கிருஷ்ணனின் தயாரிப்பில் ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் பிற்பகல் 1.15க்கு, மலேசிய மக்களின் நற்பண்புகளை பிரதிபலிக்கும் காணொளி மின்னல் எப் எம் பேஸ்புக் பக்கமாக நேயர்கள் காணலாம்.

இந்த வாரம் மலேசியர்கள் பொறுப்பானவர்களா என்ற கேள்விக்கு பதிலை இந்த காணொளி வழி தெரிந்து கொள்ளலாம்.

#TamilSchoolmychoice

ஆம், பொது மக்களுக்கு தெரியாத சில இடங்களில் கேமராவை மறைத்து வைத்து, அதற்கு பிறகு அறிவிப்பாளர் சசி தன்னுடைய கைப்பை தவற விடுகிறார்.

கைப்பை கீழே விழுவதை பார்க்கும் பொது மக்கள் அடுத்து என்ன செய்கின்றார்கள்? என்பது தான் நிகழ்ச்சியின் சிறப்பு. பிரிக்பீல்ட்ஸ் பகுதியில் கேமரவை மறைத்து விட்டு அறிவிப்பாளர் சசி எப்படி பொது மக்களோடு பேசினார், அவர்கள்  என்ன சொன்னார்கள் என்பதை மின்னல் எப் எம் பேஸ்புக்கில் பதிவேற்றம் செய்திருக்கும்  காணொளி முலமாக நேயர்கள் பார்க்கலாம்.

அதே நேரத்தில் அங்கு நடந்த சுவாரசியமான விஷயங்களை மின்னல் எப்எம் சசி பிற்பகல் மணி 1.15க்கு பகிர்ந்து கொள்ள போகிறார். மலேசியர்களின் நற்பண்புகள், நேயர்களின் தேசிய தின வாழ்த்து, மலேசியராக இருப்பதில் நாம் பெருமை கொள்ள வேண்டிய பல அம்சங்கள் இந்த தேசிய தின சிறப்பு காணொளியில் நேயர்கள் பார்க்கலாம்.

மின்னல் எப் எம் பேஸ்புக் முகவரி:-www.facebook.com/RTMMINNALfm/

சிறப்புக் காணொளி:-

https://www.facebook.com/RTMMINNALfm/videos/1002782093196348/