Home நாடு ‘அரசியலாக்க வேண்டாம்’ – மலாக்கா முத்துக்கிருஷ்ணன் வேண்டுகோள்!

‘அரசியலாக்க வேண்டாம்’ – மலாக்கா முத்துக்கிருஷ்ணன் வேண்டுகோள்!

1461
0
SHARE
Ad

Malacca muthukrishnanகோலாலம்பூர் – தன்னைத் தாக்கியவர்கள் எந்த ஒரு அரசியல் கட்சியைச் சார்ந்தவர்களும் இல்லை என்றும், அது ஒரு தனிப்பட்ட விவகாரம் என்றும் மலாக்கா முத்துக்கிருஷ்ணன் தெரிவித்திருக்கிறார்.

இது குறித்து அவர் தனது பேஸ்புக்கில் கூறியிருப்பதாவது:-

“நான் தாக்கப் பட்டத்தில் எந்த ஓர் அரசியல் கட்சியும் சம்பந்தப்படவில்லை. இது ஒரு தனிப்பட்ட விவகாரம். எந்த ஓர் அரசியல் கட்சியையும் தொடர்புபடுத்திப் பேச வேண்டாம் என்று பணிவுடன் கேட்டுக் கொள்கிறேன்.”

#TamilSchoolmychoice

“இது முடிந்து போன விவகாரம். தனிப்பட்ட ஒருவரின் தாகுத்தலை அரசியலாக்க வேண்டாம் என்று தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன். இந்தப் பிரச்சினை இத்துடன் ஒரு முடிவிற்கு வருகிறது. போலீசார் புலன் விசாரணை செய்து வருகிறார்கள்.” என்று தெரிவித்திருக்கிறார்.

மேலும், தான் பேச முடியாத நிலையில் இருப்பதாகவும், வாயினுள் நிறைய தையல்கள் போடப்பட்டிருப்பதாகவும் முத்துக்கிருஷ்ணன் குறிப்பிட்டிருக்கிறார்.

தான் பேச முடியாமல் இருப்பதால், தன்னை சொக்கட்டான் காயாக சிலர் மாற்றி வருவதாகவும் அவர் தெரிவித்திருக்கிறார்.

பிரபல எழுத்தாளரும், கட்டுரையாளருமான மலாக்கா முத்துக்கிருஷ்ணன் நேற்று திங்கட்கிழமை காலை சில மர்ம நபர்களால் கடுமையாகத் தாக்கப்பட்டார்.

ஈப்போவில் உள்ள புந்தோங் கம்போங் பகுதியில் அவரைத் தடுத்து நிறுத்திய மூன்று அடையாளம் தெரியாத மர்ம நபர்கள், ‘இனி அரசியல் கட்டுரை எழுதாதே’ என்று கூறி முகத்தில் தாக்கியதாகத் தகவல்கள் வெளியாகின என்பது குறிப்பிடத்தக்கது.