Home நாடு “தே.மு. ஒப்புதல் தராவிட்டாலும் நானே போட்டியிடுவேன்” கேவியஸ்

“தே.மு. ஒப்புதல் தராவிட்டாலும் நானே போட்டியிடுவேன்” கேவியஸ்

787
0
SHARE
Ad

kayveas-myppp-presidentமலாக்கா – தொடர்ந்து கேமரன் மலை நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிடுவேன் எனக் கூறிவரும் மைபிபிபி கட்சியின் தலைவர் டான்ஸ்ரீ கேவியஸ் “தேசிய முன்னணி என்னை அந்தத் தொகுதியில் போட்டியிட அனுமதிக்காவிட்டாலும், நானே தன்னிச்சையாக அங்கு போட்டியிடுவேன்” என அதிரடியாக அறிவித்தார்.

நேற்று சனிக்கிழமை மலாக்காவில் நடைபெற்ற மைபிபிபி கட்சியின் மலாக்கா மாநில பேராளர் கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றியபோது அவர் இவ்வாறு தெரிவித்தார்.

மலாக்கா மாநில முதல்வர் இட்ரிஸ் ஹாருண் மலாக்கா மாநில மைபிபிபி மாநாட்டை அதிகாரபூர்வமாகத் திறந்து வைத்தார்.

#TamilSchoolmychoice

“கேமரன் மலையைத் தவிர நான் வேறு எங்கும் போட்டியிடப் போவதில்லை. தேசிய முன்னணிதான் நான் போட்டியிட எனக்கு அனுமதி வழங்க வேண்டும் என்பது பற்றி எனக்கு எதுவும் தெரியாது. அப்படி எனக்கு தேசிய முன்னணி அனுமதி அளிக்காவிட்டால், எனக்கு நானே அனுமதி வழங்கிக் கொண்டு அந்தத் தொகுதியில் போட்டியிடுவேன்” எனவும் கேவியஸ் கூறியிருக்கிறார்.

மஇகாவின் தேசியத் தலைவர் கேமரன் மலை நாடாளுமன்றத் தொகுதி, மஇகாவின் பாரம்பரியத் தொகுதி, அதனை யாருக்கும் விட்டுக் கொடுக்க மாட்டோம் எனத் தொடர்ந்து கூறி வருகிறார்.

மஇகா தேசிய இளைஞர் பகுதித் தலைவர் டத்தோ சிவராஜ் கேமரன் மலை நாடாளுமன்றத் தொகுதியின் ஒருங்கிணைப்பாளராக டாக்டர் சுப்ராவால் நியமிக்கப்பட்டு, தற்போது அங்கு தீவிர தேர்தல் பணிகளிலும், பிரச்சாரங்களிலும் ஈடுபட்டு வருகிறார்.