Home நாடு இலங்கைத் தூதர் தாக்கப்பட்ட வழக்கு தொடர்கிறது!

இலங்கைத் தூதர் தாக்கப்பட்ட வழக்கு தொடர்கிறது!

883
0
SHARE
Ad

sri lanka-high commissioer-attack-case-சிப்பாங் – அண்மையில் உலக கவனத்தை ஈர்த்த, கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையத்தில் இலங்கைத் தூதர் தாக்கப்பட்ட சம்பவத்தில் குற்றம் சாட்டப்பட்ட மலேசிய நாம் தமிழர் இயக்க தலைமை பொறுப்பாளர்களான மு.அ. கலைமுகிலன், வீ. பாலமுருகன் மற்றும் இவர்களுடன் கைதான சமூக சேவகர் ரகு ஆகியோர் மீதான வழக்கு இன்று திங்கட்கிழமை அக்டோபர் 9-ஆம் தேதி முதல் மீண்டும் சிப்பாங் நீதிமன்றத்தில் தொடர்கிறது.

எதிர்வரும் 13 அக்டோபர் 2017 வரை இந்த வழக்கின் விசாரணைகள் நடைபெற நிர்ணயிக்கப்பட்டிருப்பதாக ‘நாம் தமிழர்’ இயக்கத்தின் தேசிய இளைஞர் பாசறை பொறுப்பாளர்  மாவேந்தன் தெரிவித்தார்.

nam tamilar-logoகுற்றம்சாட்டப்பட்ட மூவருக்கும் எதிராகச் சாட்சியம் அளிக்க தாக்குதலுக்கு இலக்கான இலங்கைத் தூதர் நடைபெறும் விசாரணைகளின்போது நீதிமன்றத்திற்கு வருகை தருவார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

#TamilSchoolmychoice

மலேசியத் தமிழர்களுக்கு, தமிழர் தேசிய சிந்தனையையும் தன்மான உணர்வையும் விதைத்து, நமது அடிப்படை அரசியல் உரிமைக்கும், இன மொழி மீட்சிக்கும், பண்பாடு கலாச்சாரம் காக்கவும் போராடி வரும் நாம் தமிழர் இயக்கத்திற்கு ஆதரவு தரும்படியும், அதற்காக சிப்பாங் நீதிமன்றத்தில் இன்று திரண்டு வந்து தங்களின் ஆதரவை வெளிப்படுத்த வேண்டும் எனவும், இயக்க தேசிய இளைஞர் பாசறை பொறுப்பாளரும் மூவர் விடுதலைக்கான நடவடிக்கைக் குழு ஒருங்கிணைப்பாளருமான செ.மாவேந்தன் கேட்டுக் கொண்டார்

மேலும் விவரங்கள் பெற தொடர்புக்கு :

0172444816 , 0122817024 ,0143099379