Home கலை உலகம் சூர்யாவை இயக்குகிறார் செல்வராகவன்!

சூர்யாவை இயக்குகிறார் செல்வராகவன்!

418
0
SHARE

Surya-Selvaragavanசென்னை – நடிகர் சூர்யாவை வைத்து புதிய படம் ஒன்றை துவங்குகிறார் இயக்குநர் செல்வராகவன்.

தற்போது விக்னேஸ் சிவன் இயக்கத்தில் சூர்யா நடித்து வரும் ‘தானா சேர்ந்த கூட்டம்’ திரைப்படம் இறுதிக்கட்டத்தில் இருக்கின்றது.

அது முடிந்தவுடன் வரும் ஜனவரி முதல் செல்வராகவனின் படத்தில் சூர்யா நடிக்கவிருக்கிறார்.

இது குறித்து தயாரிப்பாளர் எஸ்.ஆர்.பிரபு இன்று திங்கட்கிழமை டுவிட்டரில் வெளியிட்டிருக்கும் தகவலில், செல்வராகவன் – சூர்யா கூட்டணியிலான புதிய திரைப்படம் ஜனவரி தொடங்கப்பட்டு 2018 தீபாவளிக்கு வெளியாகத் திட்டமிடப்பட்டிருக்கிறது என்று தெரிவித்திருக்கிறார்.

Comments