Home வணிகம்/தொழில் நுட்பம் கைது செய்யப்பட்டதால் ஒரே நாளில் 750 மில்லியன் இழந்த சவுதி இளவரசர்!

கைது செய்யப்பட்டதால் ஒரே நாளில் 750 மில்லியன் இழந்த சவுதி இளவரசர்!

798
0
SHARE
Ad

al-walid-bin-talal-saudi princeரியாட் – சவுதி அரேபியாவில் பல இளவரசர்கள் ஊழல் புகார்களுக்காக கைது செய்யப்பட்டிருந்தாலும், அவர்களில் ஒரே ஒருவர் மட்டும் அனைத்து ஊடகங்களாலும் தனித்துக் குறிப்பிடப்படுகிறார்.

அவர்தான் இளவரசர் அல்வாலிட் பின் தலால்! இவரது கைது அனைத்துலக அளவில் வணிக உலகத்தையை உலுக்கியிருக்கிறது.

பெரும் கோடீஸ்வரரான இவர் அமெரிக்காவின் பல்வேறு நிறுவனங்களில் முதலீடு செய்திருக்கிறார். இவருடைய நிறுவனமான கிங்டம் ஹோல்டிங் (Kingdom Holding) பல தொழில்களில் முதலீடு செய்திருக்கிறது. இந்நிறுவனத்தின் 95 சதவீதப் பங்குகளை இவர்தான் கொண்டிருக்கிறார்.

#TamilSchoolmychoice

அனைத்துலக நிறுவனங்களான சிட்டிபேங்க், டுவிட்டர், ஆப்பிள், நியூஸ்கோர்ப் போன்ற நிறுவனங்களில் கிங்டம் ஹோல்டிங் நிறுவனம் முதலீடு செய்திருக்கிறது.

அல்வாலிட் நமது நாட்டின் இரண்டாவது பெரிய பணக்காரரான ஆனந்த கிருஷ்ணனுடனும் வணிகத் தொடர்புகளைக் கொண்டிருப்பவராவார்.

இந்நிலையில் அவரது கைதைத் தொடர்ந்து அவரது சொத்து மதிப்பில் சுமார் 750 மில்லியன் அமெரிக்க டாலர் துடைத்தொழிக்கப்பட்டிருக்கிறது என வணிக நிபுணர்கள் கணிக்கின்றனர். அவரது நிறுவனங்களின் எதிர்காலமும் கேள்விக் குறியாகிவிட்டது.

62 வயதான அல்வாலிட்டின் மொத்த சொத்து மதிப்பு 17.1 பில்லியன் அமெரிக்க டாலராக இருக்கும் என மதிப்பிடப்படுகிறது.

அதேவேளையில், அமெரிக்காவில் கல்வி கற்றவரான அல்வாலிட் நிறைய அறப்பணிகளையும் செய்திருக்கிறார். அறப்பணிகளுக்காக அதிகம் செலவிட்ட உலகக் கோடீஸ்வரர்களில் அவர் ஏழாவது இடத்தில் இருக்கிறார். இதுவரையில் சுமார் 3.5 பில்லியன் அமெரிக்க டாலரை அவர் அறப்பணிகளுக்காக வழங்கியிருக்கிறார்.