Home வணிகம்/தொழில் நுட்பம் வாட்சாப்: தவறுதலாக அனுப்பிய செய்தியை மீட்டெடுக்கலாம்!

வாட்சாப்: தவறுதலாக அனுப்பிய செய்தியை மீட்டெடுக்கலாம்!

1368
0
SHARE
Ad

whatsapp-logoஒரு நண்பருக்கோ அல்லது ஒரு குழுமத்திற்கோ உணர்ச்சி வயப்பட்டு வாட்சாப்பில் ஒரு செய்தியை எழுதுகிறோம்; கோபம் தணியும் முன் ‘அனுப்பு’ பட்டனைத் தட்டிவிடுகிறோம். சில வினாடிகள் கழித்து, ‘அடாடா … பொறுத்திருக்கலாமே …” என்ற உணர்வு தோன்றுகிறது. அவசரப்பட்டு விட்டோமே எனும் குற்ற உணர்வு உலுக்குகிறது. என்ன செய்யலாம்?

கவலை இல்லை! புதிய வாட்சாப் பதிகையில் தவறுதலாக அனுப்பிய அந்தச் செய்தியை உடனே நீக்கி விடலாம். நமக்கு மட்டுமல்லை, அந்தச் செய்தியைப் பெற்ற அனைவரின் வாட்சாப்பிலும் நீக்க வைக்கலாம்.

வாட்சாப்பில் செய்திகளைத் தவறாக மற்ற நண்பர்களுக்கும் குழுமங்களுக்கும் நம்மை அறியாமல் அனுப்புவது நடந்துவரும் ஒன்றே. அனுப்பி விட்டு மன்னிப்பு கேட்பதும், ‘sorry wrong group‘ போன்றச் செய்திகளை அனுப்புவதும் இயல்பான தொடர் நடவடிக்கையாக இருந்து வருகிறது. இந்தச் சிக்கலுக்கு எளிமையான தீர்வை வாட்சாப் தந்துள்ளது. இது, கணினிகளில் தவறுதலாக அனுப்பப்பட்டக் கட்டளை ஒன்றை மீட்டெடுப்பதைப் போன்ற (undo) வசதி எனலாம்.

#TamilSchoolmychoice

எப்படி மீட்டெடுப்பது?

1. நீங்கள் நீக்க விரும்பும் செய்தியை சில வினாடிகளுக்குத் தொடவேண்டும் (press and hold).

2. ஒரு கட்டளைப் பட்டியல் தோன்றும். அதில் ‘Delete for Everyone‘ எனும் கட்டளையைத் தேர்ந்தெடுக்க வேண்டும்.

3. நீக்கப்பட்டச் செய்தி உங்கள் வாட்சாப்பில் “You deleted this message” என்றும்,  மற்றவர்களின் செய்திப் பெட்டியில் “This message was deleted” என்றும் தோன்றும்.

sellinam-whatsapp-deleteகட்டுப்பாடுகள்:

இதில் சிலக் கட்டுப்பாடுகள் உள்ளன:

  1. அனுப்பப்பட்ட ஏழு நிமிடங்களுக்குள் செய்தியை நீக்கிவிடவேண்டும். இல்லையேல் செய்த தவறை மறைக்க முடியாது போய்விடும்!
  2. ஒரு செய்தி முழுமையாக நீக்கப்படுவதற்கு, செய்தியை அனுப்புபவரும் பெறுபவர்களும் வாட்சாப்பின் மிக அண்மையப் பதிகையைப் பயன்படுத்தவேண்டும். பயன்பாட்டுக் கருவி, ஐபோன், ஆண்டிராய்டு அல்லது விண்டோஸ் போனாகவும் இருக்கலாம். நீங்களோ அல்லது உங்கள் செய்தியைப் பெறுபவரோ, வாட்சாப்பின் அண்மையப் பதிப்பைப் பயன்படுத்தவில்லை எனில், இந்த வசதி கிடைக்காது.
  3. அனுப்பப்பட்ட செய்தி நீக்கப்படும்முன், பெற்றவர் அதனைப் படித்திருக்க வாய்ப்பு உள்ளது.
  4. நீக்கும் நடவடிக்கை வெற்றிபெறாவிட்டால், உங்களுக்கு எந்தவித அறிவிக்கையும் வாராது.

செய்தி எழுதுவதிலும் அனுப்புவதிலும் எவ்வளவுதான் கவனமாக இருந்தாலும் நம்மை அறியாமலே சில வேளைகளில் தவறுகள் நடந்துவிடுகின்றன. அவற்றைக் களைவதற்கு இந்த வசதி ஒரு வாய்ப்பைத் தருகிறது.  தவறுதலாக அனுப்பிய செய்தியை மீட்டெடுக்க வாய்ப்பு இருக்கிறது என்பதனால்,  என்னவெல்லாம் எழுதலாம் என்பதும் பொருளாகாது – இல்லையா?

-நன்றி : செல்லினம்