Home கலை உலகம் சனிக்கிழமைகளில் மின்னலின் ‘மண்ணின் நட்சத்திரம்’

சனிக்கிழமைகளில் மின்னலின் ‘மண்ணின் நட்சத்திரம்’

1324
0
SHARE
Ad

Mannin Natchathiramகோலாலம்பூர் – ஒவ்வொரு வாரமும் சனிக்கிழமைகளில் மண்ணின் நட்சத்திர நிகழ்ச்சி காலை மணி 11 தொடக்கம் மின்னலில் ஒலியேறி வருகிறது. மலேசிய பாடல்களின் சிறந்த பத்து பாடல்கள் தொகுப்பு, உள்ளூர் கலைஞர்களின் சந்திப்புகள், புத்தம் புதிய மலேசிய திரைப்படங்களின் வெளீயிடு என பல அங்கங்களை தாங்கி மலர்ந்துக் கொண்டிருக்கிறது.

இளைஞர்களை கவரும் இந்நிகழ்ச்சியை மின்னல் எஃப்எமின் ரவின் வழி நடத்திக் கொண்டிருக்கிறார். மலேசிய கலைஞர்களின் படைப்புகளை ஆதரிக்கும் வகையில் நிகழ்ச்சி இடம்பெறும்.

மேலும், இந்நிகழ்ச்சியில் சிறப்பு அம்சமாக மின்னலின் மண்ணின் நட்சத்திர (Dubsmash / Musically) போட்டி நேயர்களுக்காக தொடங்கி விட்டது. நேயர்கள் உள்ளூர் பாடல்கள் அல்லது மலேசிய திரைப்பட காட்சிகளை கொண்டு (Dubsmash / Musically Apps) பயன்படுத்தி 1 நிமிடத்திற்குள் காணொளி செய்து மின்னலின் பேஸ்புக் உள்தகவல் பெட்டிக்கு (Inbox) அனுப்ப வேண்டும்.

#TamilSchoolmychoice

இந்த போட்டி ஒவ்வொறு வாரமும் சனிக்கிழமை காலை மணி 11 தொடக்கம் பிற்பகல் 1 மணி வரை மண்ணின் நட்சத்திர நிகழ்ச்சியில் இடம்பெறும். அதே வேளையில், தேர்ந்தெடுக்கப்பட்ட காணொளியை மின்னல் எஃப்எம் பேஸ்புக்கில் ஒவ்வொரு செவ்வாய்க்கிழமையும் பதிவேற்றம் செய்யப்படும்.

பதிவேற்றம் செய்யப்பட்ட காணொளியில், எந்த காணொளிக்கு அதிகம் லைக்ஸ் வருதுதோ, அது தான் அந்த வாரம் வெற்றி பெறும் காணொளி.  தேர்ந்தெடுக்கப்பட்ட வெற்றியாளரின் பெயர் மின்னலின் மண்ணின் நட்சத்திரத்தில் நிகழ்ச்சியில் ஒவ்வொரு சனிக்கிழமை காலை மணி 11 தொடக்கம் பிற்பகல் 1 மணிக்குள் அறிவிக்கப்படும். வெற்றி பெற்ற நேயரின் சந்திப்பு இடம்பெறும்.

நேயர்கள் செய்யக்கூடிய காணொளி வித்தியாசமாக புதுமையாக அவர்களின் கற்பனைக்கு ஏற்றது போல மலேசிய பாடல்களுக்கு அல்லது திரைப்பட காட்சிக்கு (dubsmash / musically) செய்து அனுப்பினால் 200 ரிங்கிட், நேயர்களுக்கு வழங்க மின்னல் எஃப்எம் காத்திருக்கிறது. காணொளியை அனுப்பும் போது, மறவாமல் நேயர்களின் பெயர், அடையாள அட்டை எண், தொலைப்பேசி எண்களையும் அனுப்ப வேண்டும். இந்த போட்டியை குறித்த மேல் விவரங்கள் தெரிந்துக்கொள்ள வேண்டும் என்றால், மண்ணின் நட்சத்திர தயாரிப்பாளர் பிரேமா கிருஷ்ணனை 03-22887793 என்ற எண்களில் தொடர்பு கொள்ளலாம்.

இந்த வார போட்டியில் கலைவாணி டேவிட், சாய் அமிரா,  நிஷா ராஜேந்திரன், தர்ஷிணி ராஜு, யுகேந்திரன், பிரசாந்தன், குகனேஷ், மிருளாளினி போன்றவர்கள் அனுப்பிய காணொளியை மின்னல் எஃப்எம் பேஸ்புக்கில் காணலாம். இவர்களில் யார் இவ்வார வெற்றியாளர் என்பது, நேயர்களின் முடிவில் இருக்கிறது. நேயர்கள் தான் நீதிபதி. யார் அந்த வெற்றியாளர் இன்றைய மண்ணின் நட்சத்திரத்தில் நேயர்கள் தெரிந்து கொள்ளலாம். ஆக மின்னலோடு தொடர்ந்து இணைந்திருங்கள்.