Home நாடு செனட்டராகப் பதவியேற்றார் டி.மோகன்!

செனட்டராகப் பதவியேற்றார் டி.மோகன்!

977
0
SHARE
Ad

T.Mohan (Senator)கோலாலம்பூர் – மஇகா தேசிய உதவித் தலைவர் டத்தோ டி.மோகன் இன்று வியாழக்கிழமை செனட்டராகப் பதவியேற்றுக் கொண்டார்.

இது குறித்து டி.மோகன் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், “என் மீது நம்பிக்கை வைத்து எனக்கு செனட்டர் பதவி வழங்கிய பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக் மற்றும் மஇகா தேசியத் தலைவர் டத்தோஸ்ரீ டாக்டர் ச.சுப்ரமணியம் ஆகியோருக்கு எனது நன்றி”

T.Mohan (Senator 1)“இந்த உன்னதப் பதவியின் பொறுப்பையும், அதன் மீதான எதிர்பார்ப்புகளையும் நன்கு அறிவேன். எனவே தேசிய முன்னணி அரசாங்கத்திற்கும், மஇகா மற்றும் இந்திய சமுதாயத்திற்கும் என்னுடைய கடமைகளையும், பொறுப்புகளையும் சரியாகச் செய்து அவர்களின் எதிர்பார்ப்புகளை நிவர்த்தி செய்வேன் என உறுதியாகக் கூறிக் கொள்கிறேன்” என டி.மோகன் தனது அறிக்கையில் குறிப்பிட்டிருக்கிறார்.

#TamilSchoolmychoice