Home நாடு டான் கோக் வாய் நாடாளுமன்றத்திலிருந்து வெளியேற்றப்பட்டார்

டான் கோக் வாய் நாடாளுமன்றத்திலிருந்து வெளியேற்றப்பட்டார்

753
0
SHARE
Ad

tan kok wai-DAP-cheras mpகோலாலம்பூர் – ஜசெகவின் செராஸ் நாடாளுமன்ற உறுப்பினர் டான் கோக் வாய் இன்று புதன்கிழமை கூட்டரசுப் பிரதேச துணை அமைச்சர் டத்தோ லோகா பாலமோகனுடன் நாடாளுமன்றத்தில் ஏற்பட்ட ஒரு வாக்குவாதத்தைத் தொடர்ந்து நாடாளுமன்ற அவையிலிருந்து வெளியேற்றப்பட்டார்.

நாடாளுமன்றத்தில் பேசியபோது கூட்டரசுப் பிரதேச துணையமைச்சர் டத்தோ லோகா பாலமோகன், செராஸ் நாடாளுமன்ற உறுப்பினர் டான் கோக் வாய் அந்த வட்டார சட்டவிரோத சூதாட்ட மைய உரிமையாளர்களுடன் இணைந்து பணியாற்றுகிறார் எனக் கூறியதைத் தொடர்ந்து, அந்தப் பேச்சை திரும்பப் பெற்றுக் கொள்ள வேண்டும் என டான் கோக் வாய் வலியுறுத்தினார்.

Loga Bala Mohan 2
டத்தோ லோகா பாலமோகன்

இருப்பினும் லோகா பாலமோகன் தான் கூறியதைத் திரும்பப் பெற முடியாது என்றும், டான் கோக் வாய் பற்றிக் கூறியதை நாடாளுமன்றத்திற்கு வெளியே திரும்பவும் கூற முடியாது என்றும் கூறினார். டான் கோக் வாய், சட்டவிரோத சூதாட்ட மையங்களுடன் தொடர்பு கொண்டிருக்கின்றார் என்பது போன்ற தோற்றம் ஏற்பட்டிருக்கிறது என்று மட்டுமே தான் கூறியதாகவும் லோகா பாலமோகன் நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.

#TamilSchoolmychoice

இந்த வாக்குவாதங்களைத் தொடர்ந்து லோகா பாலமோகன் தன்னை அவதூறாகப் பேசி விட்டார் என்றும் தனது பேச்சுகளை மீட்டுக்கொள்ள வேண்டும் என்றும்அதுவரையில் அமரப் போவதில்லை என்றும் டான் கோக் வாய் நாடாளுமன்றத்தில் கூறினார்.

இதனைத் தொடர்ந்து டான் கோக் வாயை அமரச் சொல்லி துணை சபாநாயகர் ரொனால்ட் கியாண்டி மீண்டும் மீண்டும் வலியுறுத்தியும் அவர் மறுத்ததால், அவரை நாடாளுமன்றத்தில் இருந்து வலுக்கட்டாயமாக வெளியேற்றும் உத்தரவை ரொனால்ட் கியாண்டி பிறப்பித்தார்.

டான் கோக் வாய் ஜசெகவின் தலைவருமாவார்.