Home நாடு இணைய மோசடியைத் தவிர்க்க விழிப்புணர்வு அவசியம்: டத்தோ தெய்வீகன்

இணைய மோசடியைத் தவிர்க்க விழிப்புணர்வு அவசியம்: டத்தோ தெய்வீகன்

1036
0
SHARE
Ad

Dato Deyveeganகோலாலம்பூர் – அண்மைய காலமாக மலேசியாவில் இணையதள குற்றம் தொடர்பான புகார்கள்  அதிகரித்து வருகின்றன. இதனால் பலர் மில்லியன் கணக்கான பணத்தையும் இழந்துள்ளனர். இதன் தொடர்பாக  2000-த்திற்கும் மேற்பட்ட புகார்கள் தமது துறைக்கு கிடத்துள்ளதாக வர்த்தக குற்றப்புலனாய்வுத் துறையின் துணை இயக்குனர் டத்தோ தெய்வீகன் மின்னல் நேற்று புதன்கிழமை மின்னல் எஃப்எம்மிற்கு வழங்கிய நேர்காணலில் தெரிவித்தார்.

“தற்பொழுது தென்கிழக்காசியாவிலேயெ இணையப் பயன்பாட்டில் முன்னணியில் இருக்கிறது மலேசியா, அதனை நாம் சரியான முறையில் பயன்படுத்த வேண்டும்.ஏமாற்றுபவர்கள் பல யுக்திகளை கையாண்டு இணையம்  மூலம்  பலரை மோசடி செய்து வருகிறார்கள்.ஆசை வார்த்தைகள், பணக்காரராகும் திட்டம், பதிவு செய்யப்படாத அல்லது அரசாங்க அங்கீகாரம் இல்லாத இணைய முதலீட்டு திட்டம், உடனடி பணக்காரராகும் திட்டம் ,வெளிநாட்டினருடன் இணையம் மூலம்  காதல் வயப்பட்டு பணத்தை இழப்பது போன்றவற்றால் மலேசியர்கள் அதிகம் தங்களது பணத்தை இழந்துள்ளனர்.”

“சாதாரண மக்கள் முதற்கொண்டு படித்தவர்களும் இதில் பாதிக்கபடுவது தான் சற்று அதிர்ச்சி தரும் தகவலாகும். இந்த இணைய மோசடியில்  வெளிநாட்டில் உள்ளவர்களின் தொடர்பு அதிகம் உள்ளது. மேலும் இதனால் பணத்தை இழந்தால் அதனை மீட்டெடுப்பதற்கு வாய்ப்பே இல்லை. ஆனால் குற்றவாளியை மட்டும் தான் காவல்துறையால் கண்டுபிடித்துக் கொடுக்க முடியும்” என டத்தோ தெய்வீகன் குறிப்பிட்டார்.

#TamilSchoolmychoice

நேற்று டத்தோ தெய்வீகன் கலந்து கொண்ட இந்நிகழ்ச்சியை புவனா வீரமோகன் மற்றும் சுகன்யா ஆகிய இருவரும் வழி நடத்தினார்கள்.