Home நாடு மாபுஸ் ஓமார் பாஸ் கட்சியிலிருந்து விலகினார்!

மாபுஸ் ஓமார் பாஸ் கட்சியிலிருந்து விலகினார்!

764
0
SHARE
Ad

mahfuz-omarஅலோர்ஸ்டார் – நீண்ட காலமாக பாஸ் கட்சியில் இணைந்து செயல்பட்டு வந்தவரும், கெடா மாநிலத்திலுள்ள பொக்கோக் சேனா நாடாளுமன்றத் தொகுதியின் உறுப்பினருமான மாபுஸ் ஓமார் (படம்) பாஸ் கட்சியிலிருந்து இன்று ஞாயிற்றுக்கிழமை டிசம்பர் 31-ஆம் தேதியோடு விலகுவதாக அறிவித்திருக்கிறார்.

2008 மற்றும் 2013-ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற பொதுத் தேர்தல்களில் பாஸ் கட்சியின் சார்பாகப் போட்டியிட்டு வென்று வந்திருக்கும் மாபுஸ் ஓமார் எப்போதுமே முன்னாள் பிரதமர் துன் மகாதீருக்கு நெருக்கமானவராகக் கருதப்பட்டவராவார்.

இவருக்கு நெருக்கமான அரசியல் சகாக்கள் பலர் பாஸ் கட்சியிலிருந்து விலகி அமானா கட்சியில் இணைந்தபோதும் மாபுஸ் தொடர்ந்து பாஸ் கட்சியில் நீடித்து வந்தார். இருப்பினும் பக்காத்தான் ஹாராப்பான் எதிர்க்கட்சிக் கூட்டணிக் கட்சிகளுடன் அவர் தொடர்ந்து அணுக்கமானத் தொடர்புகளைக் கொண்டிருந்தார்.

#TamilSchoolmychoice

இந்நிலையில் மாபுஸ் அடுத்த பொதுத் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்படாது என பாஸ் கட்சியின் சார்பில் அறிவிக்கப்பட்டது.

அதைத் தொடர்ந்து மாபுஸ் பாஸ் கட்சியிலிருந்து இன்று விலகியுள்ளார்.

இவரது விலகலைத் தொடர்ந்து இவரது குடும்பத்தினரும் பாஸ் கட்சியிலிருந்து விலகுவதாக அறிவித்திருக்கின்றனர்.

அடுத்த கட்ட அரசியல் நடவடிக்கையாக மாபுஸ் ஓமார் இனி பிரிபூமி பெர்சாத்து கட்சி, அல்லது அமானா கட்சி என ஏதாவது ஒரு கட்சியில் இணைந்து தனது அரசியல் பணிகளைத் தொடர்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.

மாபுஸ் ஓமாரின் விலகல் கெடா மாநிலத்தில் பாஸ் கட்சிக்கு ஒரு பின்னடைவாகக் கருதப்படுகிறது.