Home சமயம் பங்குனி உத்திர விரத பலன்கள்

பங்குனி உத்திர விரத பலன்கள்

639
0
SHARE
Ad

lord-murugaகோலாலம்பூர், மார்ச் 26- பங்குனி உத்திரத்திற்கு முந்தைய நாளில் இருந்து விரதமாக இருந்து நமது குலக்கோவில்களுக்கு சென்று வழிபட வேண்டும்.

நம்மால் ஆன உதவியை வயதானவர்களுக்கு செய்வதன் மூலம் பெரியவர்களின் பரி பூரண ஆசிகள் நம்மை வாழ வைக்கும்.

இந்த திருமண உற்சவத்தில் கலந்து கொண்டு இறைவனை தரிசிக்க திருமணம் கூடிவரும். இறைவன் அவதரித்த ஆராட்டு விழாக்களை இன்று நினைப்பதன் மூலம் குழந்தை பாக்கியம் உண்டாகும்.

#TamilSchoolmychoice

பங்குனி உத்திரம் விரதம் இருந்து நாராயண லட்சுமிதேவி அடைந்ததைப்போல் நம் வீட்டு பெண்கள் கடைபிடிக்கும் விரதத்தின் மூலம் வற்றாத செல்வம் உண்டாகும்.

கலைமகள் பிரம்மாவை அடைந்த நாள் பங்குனி உத்திரம் என்பதால் இந்நாளில் குழந்தைகள் ஆலயம் சென்று வணங்குவதன் மூலம் கல்வியின் சிறப்பை பெறுவார்கள். கல்வியும், செல்வமும் சேர்வதன் மூலம் சிறந்த தொழில் அதிபர்களாகவும், சிறந்த வேலையை பெறுபவர்களாகவும் மாற முடியும்.

உத்யோக உயர்வு, கல்வியில் மேன்மை என அனைத்து யோகமும் கிடைப்பதுடன் சொந்தங்களின் அனுசரனையும் அமைந்து குடும்ப ஒற்றுமையும் குடும்ப பாரம்பரிய ஒற்றுமையும் உண்டாகும்.