Home இந்தியா ‘தமிழ்நாடு’ பொன்விழா கொண்டாட்டம் – எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!

‘தமிழ்நாடு’ பொன்விழா கொண்டாட்டம் – எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!

1207
0
SHARE
Ad

edapadi palanisamy-tamil nadu cm-featureசென்னை – தமிழகத்திற்குத் ‘தமிழ்நாடு’ எனப் பெயர் சூட்டி 50 ஆண்டுகள் ஆகிவிட்ட நிலையில், அதற்குப் பொன்விழா கொண்டாடும் விதமாக மாபெரும் விழா ஏற்பாடு செய்யப்படும் என தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்திருக்கிறார்.

இது குறித்து எடப்பாடி பழனிசாமி வெளியிட்டிருக்கும் அறிக்கையில்,

“நம்மோடு ஆந்திரம், கர்நாடகம், கேரளம் இணைந்து, ‘பிரசிடன்சி ஆப் மெட்ராஸ்’ என்று ஆங்கிலத்திலும், ‘சென்னை மாகாணம்’ என்று தமிழிலும் அழைக்கப்பட்டு வந்த நிலையில், இந்திய அரசியல் அமைப்புச் சட்டத்தின்படி, மாநில பிரிவினை ஏற்படுத்தப்பட்ட பிறகு, சென்னை மாகாணம் என்னும் பெயரை மாற்றித் ‘தமிழ்நாடு’ எனப் பெயர் மாற்றப்படவேண்டும் என்று அன்றைக்கு ஆளுங்கட்சியாக இருந்த காங்கிரஸ் அரசின் முன் 1956, ஜூலையில் கோரிக்கையினைக் தியாகி சங்கரலிங்கனார் முன் வைத்தார்”

#TamilSchoolmychoice

“பேரறிஞர் அண்ணா தலைமையிலான அரசு அமைந்தவுடன், 1967-ஆம் ஆண்டு அப்போதைய “சென்னை மாகாணத்திற்கு” “தமிழ்நாடு” என்று பெயர் சூட்ட, சட்டமன்றப் பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதன் தொடர்ச்சியாக, 1969-ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 14-ஆம் நாள் “தமிழ்நாடு” என்று நமது மாநிலத்திற்கு பெயர் சூட்டப்பட்டது”

“வரும் ஜனவரி 14-ஆம் நாள், வரலாற்று சிறப்பு மிக்க நமது மாநிலம் “தமிழ்நாடு” என்ற பெயரோடு 50-வது ஆண்டில் காலடி எடுத்து வைப்பதை முன்னிட்டு “தமிழ்நாடு” பொன் விழா ஆண்டாக அரசு கொண்டாட முடிவு செய்துள்ளது.”

“நம் கண் போன்ற தமிழ் மொழி மற்றும் தமிழர்களின் பெருமையை பறை சாற்றும் வகையில், கலை, விளையாட்டு, கட்டுரை, கவிதை, பேச்சுப் போட்டி போன்ற நிகழ்ச்சிகள் சென்னையிலும்,அனைத்து மாவட்டங்களிலும் சிறப்பாக நடத்தப்படும். தமிழ் ஆராய்ச்சியில் சிறந்து விளங்கும் இளம் தமிழ் ஆய்வாளர்கள் தெரிவு செய்யப்பட்டு, சென்னையில் நடைபெறும் நிறைவு விழாவில் இவர்கள் அனைவரும் சிறப்பிக்கப்படுவார்கள்.” என பழனிசாமி தனது அறிக்கையில் குறிப்பிட்டிருக்கிறார்.