Home வணிகம்/தொழில் நுட்பம் ஜனவரி 29 முதல் இந்தியர்கள் அமானா சஹாம் பங்குகளை வாங்கலாம்!

ஜனவரி 29 முதல் இந்தியர்கள் அமானா சஹாம் பங்குகளை வாங்கலாம்!

1186
0
SHARE
Ad

Amanasharesகோலாலம்பூர் – இவ்வாண்டிற்கான வரவு செலவுத் திட்டத்தில், பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக், இந்தியர்களுக்காக அறிவித்துள்ள 150 கோடி (1.5 பில்லியன்) கூடுதல் பங்குகளை, ஜனவரி 29 முதல் இந்தியர்கள் வாங்க முடியும். அவை விற்று தீர்க்கும் வரையில் விற்பனையில் இருக்கும் என மஇகா தேசியத் தலைவர் டத்தோஸ்ரீ டாக்டர் ச. சுப்பிரமணியம் தெரிவித்தார்.

இக்கூடுதல் அமானா சஹாம் சத்து மலேசியா (Amanah Saham 1Malaysia) பங்குகளை முதலீடு செய்ய விரும்புகின்றவர்கள் அருகில் உள்ள அமானா சஹாம் நேசனல் பெர்ஹாட் கிளை அலுவலகங்களிலோ அல்லது அதன் முகர்வர்களாகச் செயல்படும் வங்கிகளிலோ (May bank, CIMB, RHB, Pos Malaysia, Affin Bank, Alliance Bank, AM Bank, Bank Mualamat) அல்லது www.myasbn.com.my எனும் இணையதளத்தின் வாயிலாகவோ பரிவர்த்தனைகளை மேற்கொள்ளலாம் என்றும் டாக்டர் சுப்ரா குறிப்பிட்டார்.

புத்ராஜாவிலுள்ள மெனாரா உசகாவானில் நடைப்பெற்ற இச்சிறப்புச் செய்தியாளர் கூட்டத்தில் டத்தோஸ்ரீ டாக்டர் ச. சுப்பிரமணியம் இவ்விவரங்களை வெளியிட்டார்.

#TamilSchoolmychoice

இப்பங்கு முதலீட்டில் ஒவ்வொரு தனிநபருக்கும், ஏற்கனவே இதே முதலீட்டுத் திட்டத்தில் வாங்கியுள்ள பங்குகள் உட்பட, உச்ச வரம்பாக 30,000 ரிங்கிட் வரையில் முதலீடு செய்ய வாய்ப்பு வழங்கப்படுகிறது என்றும் டாக்டர் சுப்ரா தெரிவித்தார்.

மேலும், பி40 எனக் குறிப்பிடப்படும் குறைந்த வருமானம் ஈட்டும் குடும்பங்களின் பங்கு முதலீட்டின் அளவை அதிகரிக்கும் வகையில் அரசாங்கம் வட்டியில்லாக் கடன் திட்டத்தின் வழி 5 ஆண்டு கால அவகாசத்தில் அவர்கள் வாங்கிப் பயன்பெறும் வகையில் 50 கோடி (500 மில்லியன்) பங்குகளை ஒதுக்கியிருக்கிறது என்றும் டாக்டர் சுப்ரா தெரிவித்தார்.

தகுதியுடைய ஒவ்வொரு பி40 இந்திய குடும்பத்திற்கும் வட்டி இல்லாக் கடனாக 5,000 ரிங்கிட் வழங்கப்பட்டு, பின்னர் அப்பணம் அமானா சஹாம் சத்து மலேசியாவில் (Amanah Saham 1Malaysia) முதலீடு செய்யப்படும். இம்முதலீட்டுத் திட்டம் படிப்படியாக வறுமைக் கோட்டிற்குக் கீழ் உள்ள 100,000 பி40 இந்திய குடும்பங்களின் சேமிப்பை அதிகரிக்கச் செய்யும். இத்திட்டம் எதிர்வரும் பிப்ரவரி மாதம் பிரதமர் அவர்களால் அதிகாரப்பூர்வமாக தொடக்கி வைக்கப்படவிருக்கிறது.

கூடுதல் தகவல்களுக்கு www.asnb.com.my அல்லது www.sedic.my ஆகிய இணையதளங்களை வலம் வரலாம்.

நேற்று செவ்வாய்க்கிழமை நடைபெற்ற இச்செய்தியாளர் சந்திப்பில் பெர்மோடாலான் நேசனல் பெர்ஹாட் தலைவர் டான்ஸ்ரீ அப்துல் வாஹிட் ஓமார், செடிக் தலைமை இயக்குனர் பேராசிரியர் டத்தோ டாக்டர் என் எஸ்.ராஜேந்திரன் உட்பட பலர் கலந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.