Home உலகம் நவாஸ் ஷெரிப் கட்சித் தலைவராக நீடிக்க முடியாது: பாகிஸ்தான் உச்சநீதிமன்றம்

நவாஸ் ஷெரிப் கட்சித் தலைவராக நீடிக்க முடியாது: பாகிஸ்தான் உச்சநீதிமன்றம்

857
0
SHARE
Ad

இஸ்லாமாபாத் – பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரிப் வெளிநாடுகளில் சொத்து வாங்கியது தொடர்பான தகவல்களை பனாமா பேப்பர்ஸ் அம்பலப்படுத்தியது.

இதனால், கடுமையான அரசியல் நெருக்கடியைச் சந்தித்த நவாஸ், பிரதமர் பதவியை ராஜினாமா செய்தார்.

எனினும், பாகிஸ்தானின் ஆளுங்கட்சியான முஸ்லிம் லீக் கட்சியின் தலைவராகத் தொடர்ந்து நவாஸ் ஷெரிப்பே பதவி வகிக்கும் வகையில் சீர்திருத்த மசோதா அந்நாட்டு நாடாளுமன்றத்தில் கொண்டு வரப்பட்டது.

#TamilSchoolmychoice

இதனை எதிர்த்து எதிர்கட்சிகள், பாகிஸ்தான் உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தன.

அவ்வழக்கை விசாரணை செய்த பாகிஸ்தான் உச்சநீதிமன்றம் நவாஸ் ஷெரிப் தலைவராக நீடிக்க முடியாது எனத் தீர்ப்பு வழங்கியிருக்கிறது.