Home இந்தியா மநீம கட்சியை தேர்தல் ஆணையம் எப்போது அங்கீகரிக்கும்?

மநீம கட்சியை தேர்தல் ஆணையம் எப்போது அங்கீகரிக்கும்?

819
0
SHARE
Ad

சென்னை – நடிகர் கமல்ஹாசன் நேற்று புதன்கிழமை மதுரையில், மக்கள் நீதி மய்யம் என்ற தனது புதிய அரசியல் கட்சியின் பெயரையும், சின்னத்தையும், டில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் முன்னிலையில் அதிகாரப்பூர்வமாக வெளியிட்டார்.

இந்நிலையில், அக்கூட்டத்தில் பேசிய கமல், தாங்கள் இதனை அரசியல் கட்சியாக அங்கீகரிக்க இந்தியத் தேர்தல் ஆணையத்திடம் விண்ணப்பித்து அதற்கான ரசீதையும் பெற்றுவிட்டதாகக் குறிப்பிட்டார்.

இதனிடையே, மக்கள் நீதி மய்யம் கட்சியை, அங்கீகரிக்கும் முறைகள் இன்னும் 1 மாதத்திற்குப் பின்பே தொடங்கும் என்றும், அதுவரை இக்கட்சியின் விண்ணப்பத்தில் உள்ள தகவல்கள் சரிபார்க்கப்படும் என்றும் இந்தியத் தேர்தல் ஆணையம் தெரிவித்திருக்கிறது.

#TamilSchoolmychoice

மேலும், கட்சிக்கான சின்னத்தைத் தேர்ந்தெடுக்க சில பரிசீலனைகள் வழங்கப்படும் என்றும், கட்சித் தலைவர் பிரத்யேகமாக சின்னத்தினை தேர்ந்தெடுக்கும் போது அது குறித்து ஆய்வு செய்த பின்னர் அது அங்கீகரிக்கப்படும் என்றும் தேர்தல் ஆணையம் கூறுகின்றது.

எனவே, இந்த முறைகள் முழுவதும் நிறைவடைந்து கட்சி அதிகாரப்பூர்வமாக அங்கீகாரத்தைப் பெற குறைந்தது இன்னும் 3 மாதங்கள் ஆகும் என எதிர்பார்க்கப்படுகின்றது.