Home நாடு “சொந்த மண்ணில் நிற்பதைப் போல் உணர்கிறேன்” ஸ்டாலின் உணர்ச்சி மிக்க உரை

“சொந்த மண்ணில் நிற்பதைப் போல் உணர்கிறேன்” ஸ்டாலின் உணர்ச்சி மிக்க உரை

1385
0
SHARE
Ad

கோலாலம்பூர் – “இங்கு மலேசிய மண்ணில் தமிழர்கள் எனக்குத் தந்திருக்கும் வரவேற்பையும், ஆதரவையும் பார்க்கும்போது, இங்கே நின்று உங்கள் முன் உரையாற்றுவது என் சொந்த மண்ணில் நின்று கொண்டு உரையாற்றுவதைப் போல் உணர்கிறேன்” என உணர்ச்சி மிக்க ஆழமான உரையை சுமார் 20 நிமிடங்கள் கோலாலம்பூரில் வழங்கிய திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் தொடர்ந்து “தமிழ் மண்ணை விட்டுப் பிரிந்து வந்தாலும் தமிழை விட்டு விடாமல் கூடவே கொண்டு வந்திருக்கிறார்கள் மலேசியத் தமிழர்கள்” என புகழாரம் சூட்டினார்.

நிகழ்ச்சியின் இடையில் டத்தோஸ்ரீ விருது பெற்ற சரவணனுக்கு, டாக்டர் சுப்ராவும், ஸ்டாலினும் பொன்னாடை போர்த்தி மாலை அணிவிக்க பாராட்டு விழாவும் நடைபெற்றது

கண்ணதாசன் அறவாரியமும் மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கமும் இணைந்து இன்று ஞாயிற்றுக்கிழமை தலைநகர் ஜாலான் ராஜா லாவுட்டில் அமைந்துள்ள மாநகராட்சி மண்டபத்தில் நடத்திய உலகத் தாய்மொழி தினக் கொண்டாட்டத்தில் கலந்து கொண்டு பிற்பகலில் திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார்.

“மாபெரும் தலைவராக நான் இங்கு வந்திருப்பதாக எனக்கு முன்னர் பேசிய அமைச்சர் சுப்பிரமணியம் கூறினார். ஆனால் நான் உங்களில் ஒருவனாகத்தான் இங்கே வந்திருக்கிறேன்” என்றும் கூறிய ஸ்டாலின்,

#TamilSchoolmychoice

“உலக அளவில் தமிழ் மொழியின் வரலாறு பற்றிக் கூறும்போது மலேசியத் தமிழர்களின் பங்களிப்பை தவிர்த்து விட்டுப் பார்க்க முடியாது. முதல் உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டை 1966-ஆம் ஆண்டில் முதன் முதலாக மலேசியாதான் நடத்தியது” என்பதையும் நினைவு கூர்ந்தார்.

விழா மேடையில் சரவணன், டாக்டர் சுப்ரா, ஸ்டாலின், இராஜேந்திரன்

எம்ஜிஆர் ஆட்சிக் காலத்தின்போது மலேசியத் தமிழர்களுக்கு அவர் பல உதவிகள் புரிந்ததை டத்தோஸ்ரீ சரவணன் தன்னிடம் எடுத்துக் கூறியதையும் குறிப்பிட்ட ஸ்டாலின், தான் இந்த நிகழ்ச்சிக்கு ஏதோ வந்தோம் சென்றோம் என்றில்லாமல், மலேசியப் பிரதமர் எவ்வாறு மலேசியத் தமிழர்களுக்கு தனது கடமையையும், பங்களிப்பையும் ஆற்றி வருகிறாரோ அதே போன்று திமுகவும் ஆட்சியில் இருந்தாலும் இல்லாவிட்டாலும், தொடர்ந்து மலேசியத் தமிழர்களுக்கு துணை நிற்கும் என்றும் உறுதி கூறினார்.

தக்கார் விருதுடன் சிறப்பு செய்யப்பட்ட 10 பேர்களில் ஒருவரான வழக்கறிஞர் மதியழகன் – தமிழ்க் குயில் கலியபெருமாள் நினைவு விருது பெற்றார்

“ஆட்சி என்பது ஒரு பொறுப்பு. ஆட்சியில் இருந்தாலும் இல்லாவிட்டாலும், தமிழ் மொழிக்காகவும், தமிழினத்திற்காகவும் திமுக தொடர்ந்து பாடுபட்டு வரும். அதைத்தான் எங்களின் தலைவர் கலைஞரும் எங்களுக்குக் கற்றுக் கொடுத்திருக்கிறார்” என்றும் ஸ்டாலின் தனது உரையில் குறிப்பிட்டார்.

எத்தனையோ நாடுகளுக்குச் சென்றிருந்தாலும், எத்தனையோ நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டாலும், மலேசியாவில் தான் கலந்து கொண்ட இன்றைய நிகழ்ச்சி என்றும் தன் நினைவில் நிலைத்திருக்கும் மறக்க முடியாத நிகழ்ச்சி என்றும் ஸ்டாலின் பெருமிதத்துடன் தெரிவித்தார்.