Home இந்தியா கார்த்தி சிதம்பரத்திற்கு மார்ச் 6-ஆம் தேதி வரை தடுப்புக் காவல்

கார்த்தி சிதம்பரத்திற்கு மார்ச் 6-ஆம் தேதி வரை தடுப்புக் காவல்

814
0
SHARE
Ad

புதுடில்லி – (மலேசிய நேரம் இரவு 9.10 மணி நிலவரம்) இந்தியாவின் சிபிஐ எனப்படும் மத்தியப் புலனாய்வுத் துறையின் நேற்றைய கைது நடவடிக்கையைத் தொடர்ந்து சிபிஐ சிறப்பு நீதிமன்றம் கார்த்தியை எதிர்வரும் மார்ச் 6-ஆம் தேதி வரை தடுப்புக் காவலில் வைத்து விசாரிக்க அனுமதி வழங்கியிருக்கிறது. 

இன்று வியாழக்கிழமை பிற்பகல் 2.00 மணி முதல் இங்குள்ள பாட்டியாலா சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்ற கார்த்தி சிதம்பரம் மீதிலான தடுப்புக் காவல் விசாரணை தொடர்பிலான சில முக்கிய அம்சங்கள்:

  • இன்று நடைபெற்ற நீதிமன்ற விசாரணையில் இருதரப்புகளின் வாதப் பிரதிவாதங்கள் – சுமார் 3 மணிநேரத்திற்கும் கூடுதலாக நீடித்தன.
  • நீதிபதி தனது தீர்ப்பை வழங்குவதற்கான உத்தரவைப் பிறப்பிக்கும் முன்பு தனக்கு சிறிது கால அவகாசம் தேவை என நீதிமன்ற நடவடிக்கைகளை ஒத்தி வைத்தார்.
  • நீதிமன்றம் வழங்கிய இடைவேளை கால அவகாசத்தில் நீதிமன்றத்தில் இருந்த தனது பெற்றோர்களைச் சந்திக்க கார்த்தி சிதம்பரம் நீதிமன்றத்தின் அனுமதியைக் கோரினார். அதற்கு நீதிமன்றம் அனுமதி அளித்ததைத் தொடர்ந்து சிபிஐ அதிகாரிகள் முன்னிலையில் கார்த்தி தனது பெற்றோர்களைச் (ப.சிதம்பரம் – நளினி சிதம்பரம்) சந்தித்தார்.
  • நீதிமன்ற விசாரணையின்போது, ப.சிதம்பரம், “மன உறுதியுடன் இருக்கவும். இறுதிவரையில் நான் பக்கபலமாக இருக்கிறேன்” என கார்த்தி சிதம்பரத்திடம் கூறியிருக்கிறார்.
  • கார்த்தி சிதம்பரம் சார்பில் வழக்காடிய வழக்கறிஞர்களுக்கு முழு ஆலோசனைகளையும், வாதங்களுக்கான சட்ட நுணுக்கங்களையும் இன்று காலை முதல் தனது இல்லத்தில் சிதம்பரம் வழங்கியிருக்கிறார்.
  • பின்னர் ப.சிதம்பரம் தனது மனைவி நளினி சிதம்பரத்துடன் நீதிமன்றத்திற்கு நேரடியாக வருகை தந்தார்.

-செல்லியல் தொகுப்பு