Home நாடு உல்லாசப்படகு ஜோ லோவிற்குச் சொந்தமானது என்பதற்கு ஆதாரமில்லை: சாலே

உல்லாசப்படகு ஜோ லோவிற்குச் சொந்தமானது என்பதற்கு ஆதாரமில்லை: சாலே

776
0
SHARE
Ad

கோலாலம்பூர் – அமெரிக்காவின் மத்திய புலனாய்வுத் துறை அதிகாரிகளின் உத்தரவின் படி, இந்தோனிய அதிகாரிகளால் பாலி தீவு அருகே முடக்கப்பட்டிருக்கும் உல்லாசப்படகு, பினாங்கைச் சேர்ந்த தொழிலதிபர் ஜோ லோவுக்குச் சொந்தமானது என்பதற்கோ அல்லது 1எம்டிபி நிதியில் இருந்து வாங்கப்பட்டது என்பதற்கோ எந்த ஒரு ஆதாரமும் இல்லையென பல்லூடகம் மற்றும் தொலைத்தொடர்பு அமைச்சர் சாலே சையத் கெருவாக் இன்று வெள்ளிக்கிழமை தெரிவித்திருக்கிறார்.

இது குறித்து தற்போது வெளிவந்து கொண்டிருக்கும் தகவல்கள் அனைத்தும், ‘போலியான செய்திகளுக்கு’ ஒரு நல்ல உதாரணம் என்றும் சாலே கெருவாக் தெரிவித்திருக்கிறார்.

இது குறித்து அவர் மேலும் கூறுகையில்,

#TamilSchoolmychoice

“(உல்லாசப்படகு)1எம்டிபி நிதியில் இருந்து வாங்கப்பட்டது, ஜோ லோவுக்குச் சொந்தமானது என வெளிவரும் தகவல்கள் அனைத்தும் நிரூபிக்கப்படாத ஒன்று. நிஜத்தில் அமெரிக்க நீதித்துறை 1எம்டிபியில் இருந்து சுரண்டப்பட்ட நிதிகளை மீட்பதாகக் கூறி தொடுத்துள்ள வழக்கு, கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதமே நிறுத்தி வைக்கப்பட்டுவிட்டது” என்று தெரிவித்திருக்கிறார்.

மேலும், அமெரிக்க நீதித்துறை, கடந்த 2016-ம் ஆண்டு ஜூலை மாதம் பரபரப்பான செய்தியாளர் சந்திப்பை நடத்தியதைத் தவிர, இதுவரை தங்களது குற்றச்சாட்டில் எதையும் நிரூபிக்கவில்லை என்றும் சாலே கெருவாக் குறிப்பிட்டிருக்கிறார்.