Home வணிகம்/தொழில் நுட்பம் ரிங்கிட் 15 பில்லியனைத் தொடும் மலேசிய இந்திய வர்த்தகம்-டாக்டர் ரிபெக்கா

ரிங்கிட் 15 பில்லியனைத் தொடும் மலேசிய இந்திய வர்த்தகம்-டாக்டர் ரிபெக்கா

529
0
SHARE
Ad

Rebecaa-Fatima-MITIகோலாலம்பூர் மார்ச் 28 – இந்த ஆண்டு, மலேசியா-இந்தியா ஆகிய இரு நாடுகளுமே வலுவான பொருளாதார வளர்ச்சியைப் பதிவு செய்திருப்பதால், இந்த இரு நாடுகளுக்குமான  இரு தரப்பு வர்த்தகம் 15 பில்லியன் அமெரிக்க டாலரை எட்டிப்பிடிக்கும் என்று சர்வதேச வர்த்தக தொழில்துறை அமைச்சின் தலைமைச் செயலாளர் டத்தோ டாக்டர் ரிபெக்கா பாத்திமா மரியா அறிவித்துள்ளர்.

மலேசிய-இந்தியாவின் கடும் உழைப்பு

இந்த இரு தரப்பு வர்த்தகத்தை உயர்த்த மலேசியாவும், இந்தியாவும் கடுமையாக வேலை செய்து வருவதை ரிபீஸா குறிப்பிட்டார். கடந்த ஆண்டு இவ்விரு நாடுகளின் இருதரப்பு வர்த்தகம் 13.3 பில்லியன் அமெரிக்க டாலராக இருந்த வேளையில், மலேசிய-இந்திய பொருளாதார ஒத்துழைப்பு ஒப்பந்தம் கையெழுத்திட்டுள்ள நிலையில், இவ்விரு நாடுகளின் வர்த்தகமும் சரியான பாதையில் செல்வதால் நிச்சயம் 15 பில்லியனைத் தொடும் சாத்தியக்கூறுகள் உள்ளன என்று அவர் நம்பிக்கைத் தெரிவித்தார்.

#TamilSchoolmychoice

இன்னும் பயன்படுத்திக்கொள்ள வேண்டிய வாய்ப்புகள் அதிகம்

மலேசியவிலும் இந்தியாவிலும் உள்ள தனியார் நிறுவனங்களின் தொடர்புகள் இவ்வர்த்தக உயர்வுக்கு பெரும் பங்காற்றியுள்ள போதும்,இன்னும் பயன்படுத்திக் கொள்ளவேண்டிய வாய்ப்புகள் பெருகிக்கிடப்பதையும் அவர் குறிப்பிட்டார்.

ஐ.ஜே.எம் பெர்ஹாட் ஏர்பாட்டில் அதன் தலைவர் கிருஷ்ணன் தான் தலைமையில் அண்னையில் நடந்த இந்த மலேசிய-இந்தியா ஒரு நாள் வர்த்தக மாநாடு 2013க்குப் பிறகு நிருபர்களிடம் பேசிய ரிபெக்கா இரு நாடுகளுக்கும் இடையே சிறந்த நட்புறவு நிலவிவருவதையும், இம்மாநாடு மலேசிய வர்த்தகர்கள் இந்தியாவின் அரசியல் பொருளாதார சூழ்நிலையைப் பற்றி அறிந்துகொள்ள நடத்தப்பட்டது என்றும் தெரிவித்தார்.