Home உலகம் ஜோங் நம்மை வடகொரியா தான் கொன்றது – அமெரிக்கா அறிவிப்பு!

ஜோங் நம்மை வடகொரியா தான் கொன்றது – அமெரிக்கா அறிவிப்பு!

1198
0
SHARE
Ad

வாஷிங்டன் – வடகொரிய அதிபர் கிம் ஜோங் உன், தனக்குப் போட்டியாக இருந்த தனது ஒன்றுவிட்ட சகோதரர் கிம் ஜோங் நம்மை, விஎஃப்எக்ஸ் இரசாயனத்தைக் கொண்டு கொலை செய்யக் கட்டளையிட்டதாக அமெரிக்கா செவ்வாய்க்கிழமை அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கிறது.

இது குறித்து அமெரிக்க செய்தித் தொடர்பாளர் ஹீதர் நாவ்ரெட் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், “இரசாயன ஆயுதங்களைப் பயன்படுத்துவதற்கு எதிரான உலகளாவிய விதிகளுக்கு எதிரான வட கொரியாவின் அலட்சியப் போக்கை இச்சம்பவம் காட்டுகிறது. வட கொரியாவின் டபிள்யூஎம்டி திட்டத்தையும் பொறுத்துக்கொள்ள முடியாத” என்று தெரிவித்திருக்கிறார். 

நேற்று செவ்வாய்கிழமை தான், தென்கொரிய பேராளர்கள், வடகொரிய அதிபர் கிம் ஜோங் உன்னுடன் அணு ஆயுதச் சோதனைகள் தொடர்பாக சுமூகப் பேச்சுவார்த்தை நடத்தினர்.

#TamilSchoolmychoice

பேச்சுவார்த்தையின் முடிவில், அணு ஆயுதச் சோதனைகளை நிறுத்திக் கொண்டு அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடத்த கிம் ஜோங் உன் விருப்பம் தெரிவித்ததாகவும் அவர்கள் தெரிவித்தனர்.

இந்நிலையில், அமெரிக்காவின் இந்த அறிவிப்பு, வடகொரியாவுக்கு எதிரான மேலும் ஒரு பொருளாதாரத் தடையாகப் பார்க்கப்படுகின்றது. இதனால் அமெரிக்கா – வடகொரியா உறவில் விரிசல் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது.

கிம் ஜோங் உன்னின் ஒன்று விட்ட சகோதரரான கிம் ஜோங் நம், கடந்த 2017-ம் ஆண்டு பிப்ரவரி மாதம், மலேசிய விமான நிலையத்தில் இரு பெண்களால் இரசாயனம் தேய்த்துக் கொலை செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.