Home கலை உலகம் வெற்றிமாறன் – தனுஷ் கூட்டணியின் ‘வடசென்னை’ முதல் பார்வை!

வெற்றிமாறன் – தனுஷ் கூட்டணியின் ‘வடசென்னை’ முதல் பார்வை!

864
0
SHARE
Ad

சென்னை – வெற்றிமாறன் இயக்கத்தில், தனுஷ் முக்கியக் கதாப்பாத்திரத்தில் நடித்திருக்கும் ‘வடசென்னை’ திரைப்படத்தின் முதல் பார்வை வெளியாகியிருக்கிறது.

இத்திரைப்படத்தில் தனுஷுடன், ஐஸ்வர்யா ராஜேஸ், சமுத்திரக்கனி, அமீர், ஆண்ட்ரியா, டேனியல் பாலாஜி, கிஷோர் ஆகியோர் முக்கியக் கதாப்பாத்திரங்களில் நடித்திருக்கின்றனர்.

ஜூன் மாதம் இத்திரைப்படம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

#TamilSchoolmychoice

இத்திரைப்படம் எந்த அளவிற்கு ரசிகர்களிடம் வரவேற்பினைப் பெறுகின்றதோ அதற்கேற்ப இதன் தொடர்ச்சியாக மேலும் இரண்டு பாகங்களை எடுக்க வெற்றிமாறன் திட்டமிட்டிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.