Home வணிகம்/தொழில் நுட்பம் பற்று அட்டைக்கு துணைக் கட்டணம் வசூலிப்பு: ஏர் ஆசியா மீது குற்றச்சாட்டு!

பற்று அட்டைக்கு துணைக் கட்டணம் வசூலிப்பு: ஏர் ஆசியா மீது குற்றச்சாட்டு!

975
0
SHARE
Ad

கோலாலம்பூர் – பற்று அட்டை அல்லது கடன் அட்டை மூலம் பணம் செலுத்தும் போது அதற்கு துணைக் கட்டணங்கள் எதுவும் வாடிக்கையாளர்கள் கட்டத் தேவையில்லை என்றும், அவ்வாறு விற்பனையாளர்கள் கட்டணம் விதித்தால் சம்பந்தப்பட்ட வங்கியிடம் புகார் அளிக்கலாம் என்றும் அண்மையில் பேங்க் நெகாரா வங்கி அறிவித்தது.

இந்நிலையில், மலிவுக்கட்டண விமான நிறுவனமான ஏர் ஆசியா, பற்று அட்டை அல்லது கடன் அட்டை மூலம், இருக்கை முன்பதிவு செய்யும் வாடிக்கையாளர்களிடத்தில் 4 ரிங்கிட் முதல் 30 ரிங்கிட் வரையில் வசூலிப்பதாக குற்றச்சாட்டு எழுந்திருக்கிறது.

இது குறித்து மலேசிய டிஜிட்டல் பொருளாதாரம் நுகர்வோர் சங்கம் (எம்டிஇசிஏ) வெளியிட்டிருக்கும் அறிக்கையில், வாடிக்கையாளர்களிடத்தில் ஏர் ஆசியா குறைந்தது 4 ரிங்கிட் வசூலித்து ஆண்டுக்கு சுமார் 80 மில்லியன் ரிங்கிட் ஈட்டுவதாகக் குறிப்பிட்டிருக்கிறது.

#TamilSchoolmychoice

மேலும், இந்தத் துணைக் கட்டணத்தில் பொருட்கள் மற்றும் சேவை வரி 6 விழுக்காடு பொருட்கள் மற்றும் சேவை வரியும் அடங்கும் என்று ஏர் ஆசியா இணையதளத்தில் கூறப்பட்டிருப்பதாகவும் எம்டிஇசிஏ தெரிவித்திருக்கிறது.