Home நாடு இந்திரா காந்தியின் பெயர் அமெரிக்காவின் உயரிய விருதுக்குப் பரிந்துரை!

இந்திரா காந்தியின் பெயர் அமெரிக்காவின் உயரிய விருதுக்குப் பரிந்துரை!

1296
0
SHARE
Ad

கோலாலம்பூர் – தனது மூன்று பிள்ளைகளை, தனது சம்மதமின்றி, முன்னாள் கணவர் இஸ்லாம் மதத்திற்கு மாற்றியதை எதிர்த்து, வழக்குத் தொடுத்து, கடைசி வரை துணிச்சலுடன் போராடி, உச்சநீதிமன்றத்தில் நியாயத்தைப் பெற்ற பாலர் பள்ளி ஆசிரியை இந்திரா காந்தியின் பெயர், அமெரிக்காவில் ஒவ்வொரு ஆண்டும் துணிச்சலான பெண்களுக்கு வழங்கப்படும் உயரிய விருதுக்குப் பரிந்துரை செய்யப்பட்டிருக்கிறது.

கோலாலம்பூரில் உள்ள அமெரிக்கத் தூதரகம் இந்திரா காந்தியின் பெயரை அவ்விருதுக்குப் பரிந்துரை செய்திருப்பதாக எப்எம்டி செய்தி வெளியிட்டிருக்கிறது.

2018 அனைத்துலக மகளிர் தினம் மற்றும் மகளிர் வரலாற்று மாதக் கொண்டாட்டம் அமெரிக்காவில் நடைபெறுவதை முன்னிட்டு, நாளை புதன்கிழமை, மலேசியாவிற்கான அமெரிக்கத் தூதர் கமலா ஷிரின் லாக்திர், இந்திராவை வரவேற்று கௌரவிக்கவிருக்கிறார் என்றும் தகவல்கள் கூறுகின்றன.

#TamilSchoolmychoice