Home நாடு ஆர்டிஎம் 72-ம் ஆண்டு விழா: மின்னல் ஏற்பாட்டில் இசைக் கொண்டாட்டம்!

ஆர்டிஎம் 72-ம் ஆண்டு விழா: மின்னல் ஏற்பாட்டில் இசைக் கொண்டாட்டம்!

932
0
SHARE
Ad

கோலாலம்பூர் – ஆர்டிஎம் 72 -ம் ஆண்டு நிறைவு விழா, மின்னல் எஃப்எம் ஏற்பாட்டில் நாளை 31 மார்ச் 2018, சனிக்கிழமை மாலை மணி 5 தொடங்கி நள்ளிரவு மணி 12 வரை ஜாலான் மெலாத்தி, புக்கிட் பெருந்துங், ராவாங்கில் நடைபெறவிருக்கின்றது.

வழக்கமாக ஆர்டிஎம்மில் கொண்டாடப்படும் இவ்விழா, இம்முறை மின்னல் எஃப்எம் ஏற்பாட்டில், மக்களோடு இணைந்து கொண்டாடப்படவிருக்கிறது.

மின்னல் எஃப்எம், ஆர்டிஎம் பல தரப்பு நேயர்களையும், ரசிகர்களையும் கொண்டுள்ளதால் அனைவரையும் மகிழ்ச்சிப்படுத்தும் நோக்கில், சிறியவர் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் கலந்து கொள்ளும் வகையில் ஆர்டிம்எம்மின் 72 -ம் ஆண்டு நிறைவு விழா அமையவிருக்கிறது.

#TamilSchoolmychoice

மின்னல் எஃப்எம் அறிவிப்பாளர்களின் வழிநடத்தலோடு மாலை 5 மணிக்கு சிறுவர்களுக்கான வர்ணம் தீட்டும் போட்டி நடைபெறும். இதில் 7 முதல் 10 வயதிற்கு  உட்பட்ட சிறுவர்கள் கலந்து கொள்ளலாம் என்றும், முதலில் வரும் 100 சிறுவர்களுக்கு மட்டுமே இந்த வாய்ப்பு வழங்கப்படும் என்றும் மின்னல் கூறியிருக்கின்றது.

மேலும் அதிருஷ்ட குழுக்கள், போட்டிகள், நேரடி வர்ணனைகள், ஆடல் பாடல் என நிறைய அங்கங்கள் பொதுமக்களுக்காக ஏற்பாடு செய்யப்பட்டிருக்கின்றன. மேலும், நள்ளிரவு மணி 12 -க்கு சிறப்பு கொண்டாட்டம் இருக்கின்றது.

இரவு மணி 8 தொடங்கி நள்ளிரவு மணி 12 வரை உள்ளூர் கலைஞர்களின் படைப்புகளையும் உங்கள் அபிமான மின்னல் எஃப்எம் அறிவிப்பாளர்களையும் மேடையில் காணலாம்.

ஆடல், பாடல் என மக்களை மகிழ்ச்சிபடுத்த உள்ளூர் கலைஞர்கள் ஷாமினி, சித்தார்தன், ஷாஸ்தன், குமரேஷ், நாராயணி, ஷர்மிளா சிவகுரு,டிஎம்எஸ் சிவகாந்தன், காயத்ரி தண்டபாணி, சைக்கோ யூனிட் ஷீஜே, ரேபிட் மேக், முகேன் ராவ் எம்ஜிஆர், மில்லெனியம் ஆர்ட்ஸ் நடனக்குழுவினர் ஆகியோரின் படைப்புகள் இடம்பெறவிருக்கின்றன என்றும் மின்னல் எஃப்எம் தெரிவித்திருக்கிறது.

மேலும், நிகழ்ச்சி நடைபெறும் இடத்தில் அரசு நிறுவனங்களின் கூடாரங்களும் அமைக்கப்பட்டிருக்கும் என்பதால், பொதுமக்கள் அதன் மூலம் தகவல்களைப் பெற்று பயனடைய முடியும் என்றும் மின்னல் எஃப்எம் தெரிவித்திருக்கிறது.