Home உலகம் சீனாவின் விண்வெளி ஆய்வு மையம் தென்பசிபிக்கில் எரிந்து விழுந்தது!

சீனாவின் விண்வெளி ஆய்வு மையம் தென்பசிபிக்கில் எரிந்து விழுந்தது!

1236
0
SHARE
Ad

பெய்ஜிங் – சீனாவின் தியாங்கோங் 1 விண்வெளி ஆய்வு மையம், விண்வெளியில் தனது கட்டுப்பாட்டை இழந்த நிலையில் சுற்றி வந்தது.

இந்நிலையில், அது ஏப்ரல் முதல் வாரத்தில் பூமியை நோக்கித் திரும்பி, பூமியின் ஏதாவது ஒரு பகுதியில் விழுந்து நொறுங்கும் என நாசா உட்பட விண்வெளி ஆராய்ச்சி மையங்கள் கூறியிருந்தன.

அதன் படி, இன்று திங்கட்கிழமை தென்பசிபிக்கில் அந்த விண்வெளி ஆய்வுக்கூடம் பெரும்பாலான பாகங்கள் எரிந்த நிலையில் விழுந்து நொறுங்கியது.

#TamilSchoolmychoice

பெய்ஜிங் நேரப்படி, காலை 8.15 மணியளவில், அந்த விண்வெளி ஆய்வுக்கூடம் விழுந்து நொறுங்கியதாக சீனாவின் விண்வெளி ஆய்வு மையம் அறிக்கை விடுத்திருக்கிறது.

தியாங்கோங் என்றால் சீன மொழியில் ‘சொர்க்கமான அரண்மனை’ என்று பொருள். சீனா இந்த விண்வெளி ஆய்வுக்கூடத்தை, கடந்த 2011-ம் ஆண்டு அமைத்தது குறிப்பிடத்தக்கது.