Home இந்தியா சல்மான் கான்: 5 ஆண்டுகள் சிறையோடு ‘கைதி எண் 106’

சல்மான் கான்: 5 ஆண்டுகள் சிறையோடு ‘கைதி எண் 106’

1111
0
SHARE
Ad

ஜோத்பூர் – 20 ஆண்டுகளாக நீடித்து வந்த மான்களை வேட்டையாடிய வழக்கில் சல்மான் கானுக்கு இன்று வியாழக்கிழமை ஜோத்பூர் நீதிமன்றம் 5 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்ததைத் தொடர்ந்து, அவர் ஜோத்பூர் மத்திய சிறைச்சாலைக்குக் கொண்டு செல்லப்பட்டார்.

அங்கு ‘கைதி எண் 106’ என்ற அடையாளத்தோடு இன்றிரவு சிறைச்சாலையில் கழிப்பார்.

நாளை வெள்ளிக்கிழமை அவரது பிணை (ஜாமீன்) மீதான மனு விசாரணைக்கு வரும்போது அவரது தலைவிதியும் தெரிய வரும்.

#TamilSchoolmychoice

அப்படி அவருக்கு ஜாமீன் கிடைக்கவில்லையென்றால், அவரது சிறைத் தண்டனை தொடரும்.