Home நாடு நம்ப முடியாத திருப்பம்: அன்வார் கட்சியின் சின்னத்தில் மகாதீர் போட்டி

நம்ப முடியாத திருப்பம்: அன்வார் கட்சியின் சின்னத்தில் மகாதீர் போட்டி

1146
0
SHARE
Ad
பாசிர் கூடாங்கில் பிகேஆர் கொடிகளுடன் பக்காத்தான் தலைவர்கள்

பாசிர் கூடாங் – அரசியலில் எதுவும் நடக்கலாம் என்பார்கள். ஆனால் இப்படியும் நடக்குமா என சில சம்பவங்கள் நடந்தேறி நம்மை ஆச்சரியப்பட வைக்கும்.

அத்தகைய ஒரு சம்பவம் நேற்று வெள்ளிக்கிழமை மலேசிய அரசியல் அரங்கில் அரங்கேறியது. பலரும் எதிர்பார்த்தது போல, பக்காத்தான் கூட்டணி கட்சிகளின் வேட்பாளர்கள் அனைவரும் ஒரே சின்னத்தில் – அன்வார் இப்ராகிமின் பிகேஆர் கட்சி சின்னத்தில் – போட்டியிடுவார்கள் என்ற துன் மகாதீரின் அறிவிப்புதான் அது.

ஜோகூர் மாநிலத்தின் துறைமுக நகரான பாசீர் கூடாங்கில் நடைபெற்ற பக்காத்தான் கூட்டணியின் மாபெரும் பொதுக் கூட்டத்தில் மகாதீர் இந்த அறிவிப்பைச் செய்தார்.

#TamilSchoolmychoice

இந்த முடிவின் மூலம் எதிர்வரும் பொதுத் தேர்தலில் துன் மகாதீர் அன்வாரின் பிகேஆர் கட்சியின் சின்னத்தின் கீழ் போட்டியிடும் நிலைமை ஏற்பட்டுள்ளது.

இன்றைக்குத் திரும்பிப் பார்த்தால், 1998-ஆம் ஆண்டில் அன்வார் இப்ராகிம் மகாதீரால் அம்னோவில் இருந்து நீக்கப்பட்டபோது ஏற்பட்ட போராட்டங்களை நேரில் பார்த்தவர்களுக்கு, எதிர்காலத்தில் இப்படி ஒரு திருப்பம் நேருமா, அதனையும் பார்க்க இப்போது நாம் உயிருடன் இருக்கிறோமே என்ற புளகாங்கிதத்தையும்,  அதிர்ச்சியையும் ஒருசேர அனுபவித்திருப்பார்கள்.

அதையேதான் பிகேஆர் கட்சியின் தலைவியும் அன்வாரின் மனைவியுமான வான் அசிசாவும் அனுபவித்து, அந்த அனுபவத்தை நேற்று பாசிர் கூடாங்கில் மேடையிலும் பகிர்ந்து கொண்டார்.

“இது ஒரு மாபெரும் உணர்ச்சிபூர்வமான தருணம். துன் மகாதீர் எங்களின் பிகேஆர் கட்சியின் சின்னத்தைப் பயன்படுத்துவது என்பது ஓர் உணர்ச்சிபூர்வமான தருணமாகும். பெர்சாத்து கட்சியின் பதிவு இரத்து செய்யப்பட்டதும் ஏதோ இதுபோன்ற ஒரு நன்மைக்காகத்தான் என நினைக்கிறோம். எல்லாவற்றையும் விட முக்கியமானது நாம் அனைவரும் ஒற்றுமையாக இயங்குகிறோம் என்பதை எடுத்துக் காட்டும் விதமாக நாம் இயங்குவதுதான்” என வான் அசிசா பாசிர் கூடாங்கில் உரையாற்றும்போது கூறியிருக்கிறார்.

அதைவிட முக்கியமாக 1969 முதல் ராக்கெட் சின்னத்தில் போட்டியிட்டு வந்திருக்கும் ஜசெகவும் தனது கட்சி சின்னத்தை நஜிப்பை வீழ்த்தும் போராட்டத்திற்காக விட்டுக் கொடுத்திருக்கிறது. எனினும் இந்த முடிவு தீபகற்ப மலேசியாவுக்கு மட்டும்தான். சபா, சரவாக் மாநிலங்களில் ஜசெக தனது சின்னத்திலேயே போட்டியிடும்.