Home நாடு பிரிம் உதவித் தொகை இரட்டிப்பாக அதிகரிப்பு

பிரிம் உதவித் தொகை இரட்டிப்பாக அதிகரிப்பு

927
0
SHARE
Ad

கோலாலம்பூர் – இன்று சனிக்கிழமை இரவு தேசிய முன்னணியின் 14-வது தேர்தல் கொள்கை அறிக்கையை வெளியிட்டு உரையாற்றிய பிரதமர் நஜிப் துன் ரசாக் எதிர்வரும் ஜூன் மாதத்தில் வழங்கப்படவிருக்கும் பிரிம் உதவித் தொகை இரட்டிப்பாக அதிகரிக்கப்படும் என அறிவித்தார்.

இரவு 8.45 மணிக்குத் தொடங்கி சுமார் ஒரு மணி நேரம் உரையாற்றிய நஜிப் தனது உரையின் இறுதியில் பிரிம் உதவித் தொகை அதிகரிப்புகளை அறிவித்தார்.

3,000 ரிங்கிட்டுக்கும் குறைவான வருமானம் பெறுபவர்கள் ஜூன் மாதத்தில் 400 ரிங்கிட்டுக்கு பதிலாக 800 ரிங்கிட் பெறுவர். இதன் மூலம் இவர்கள் பெறும் பிரிம் உதவித் தொகை மொத்தம் 1,200 ரிங்கிட்டிலிருந்து 2,000 ரிங்கிட்டாக உயர்த்தப்படுகிறது.

#TamilSchoolmychoice

அதே போல 3,000 ரிங்கிட்டுக்கும், 4,000 ரிங்கிட்டுக்கும் இடையில் வருமானம் பெறுபவர்கள் பெறும் தொகை 300 ரிங்கிட்டில் இருந்து 600 ரிங்கிட்டாக உயர்த்தப்படும். ஜூன் மற்றும் ஆகஸ்ட் மாதத்தில் வழங்கப்படும் இந்தத் தொகை உயர்த்தப்படுகிறது. இதன் மூலம் இந்தப் பிரிவினர் பெறும் பிரிம் உதவித் தொகை மொத்தம் 1,500 ரிங்கிட்டாகும்.

திருமணம் ஆகாதவர்களுக்கான உதவித் தொகையும் அதிகரிக்கப்படும். 2,000 ரிங்கிட்டுக்கும் குறைவாக வருமானம்  பெறும் திருமணம் ஆகாதவர்களுக்கு தற்போது ஒரு தடவையாக வழங்கப்படும் 450 ரிங்கிட் இனி 600 ரிங்கிட்டாக உயர்த்தப்படும்.

மேலும் புதிய பிரிம் பிரிவு ஒன்றும் உருவாக்கப்பட்டுள்ளது. 4,000 ரிங்கிட் முதல் 5,000 ரிங்கிட் வரை வருமானம் பெறுபவர்களுக்கான புதிய பிரிவு ஒன்று ஒருவாக்கப்பட்டு இவர்களுக்கு 700 ரிங்கிட் இனி வழங்கப்படும். எதிர்வரும் ஜூன் மற்றும் ஆகஸ்ட் என இரு தவணைகளில் இந்த 700 ரிங்கிட் வழங்கப்படும்.

மேலும் பிரிம் உதவித் தொகை பெறுபவர்களின் பிள்ளைகள் பல்கலைக் கழகங்களிலும், உயர் கல்விக் கூடங்களிலும் பதிந்து கொண்டால் இந்த ஆண்டு அவர்களுக்கு ஒரு தடவை உதவித் தொகையான 1,500 ரிங்கிட் வழங்கப்படும் என்றும் நஜிப் அறிவித்தார்.