Home நாடு விடுமுறை இல்லையென்றால் வாக்களிக்க வரவேண்டாம் – சிங்கப்பூர் வாழ் மலேசியர்களுக்கு சாஹிட் அறிவுரை!

விடுமுறை இல்லையென்றால் வாக்களிக்க வரவேண்டாம் – சிங்கப்பூர் வாழ் மலேசியர்களுக்கு சாஹிட் அறிவுரை!

1106
0
SHARE
Ad

கோலாலம்பூர் – மே 9-ம் தேதி நடைபெறவிருக்கும் 14-வது பொதுத்தேர்தல் அன்று மலேசிய அரசாங்கம் பொதுவிடுமுறை அறிவித்திருக்கிறது. என்றாலும் சிங்கப்பூரில் தங்கி பணியாற்றி வரும் மலேசியர்கள், தங்கள் நிறுவனம் விடுமுறை அளிக்கவில்லை என்றால் வாக்களிக்க வரவேண்டாம் என காபந்து துணைப் பிரதமர் டத்தோஸ்ரீ அகமட் சாஹிட் ஹமீடி தெரிவித்திருக்கிறார்.

“நாங்கள் தேர்தல் அன்று பொதுவிடுமுறை அறிவித்திருக்கிறோம். எனவே, வருவதா? வேண்டாமா என்பது அவர்களின் முடிவு.

“எனது பார்வையில், அரசாங்கம் யாரையும் வாக்களிக்க வருமாறு ஊக்கமும் படுத்தாது, தடுக்கவும் செய்யாது. அது அவரவர் தனிப்பட்ட உரிமை.

#TamilSchoolmychoice

“ஆனால், அந்த நாட்டில் (சிங்கப்பூர்) நிறுவனங்கள், அனுமதி வழங்கவில்லை என்றால், (மலேசியர்கள் விடுப்பு எடுக்க), வாக்களிக்க வராமல் இருப்பதே சிறப்பு என்று நினைக்கிறேன்” என சாஹிட் குளுவாங்கில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்திருக்கிறார்.