Home நாடு பாகான் டாலாம்: தனசேகரனுக்குப் பதிலாக சதீஸ் முனியாண்டி

பாகான் டாலாம்: தனசேகரனுக்குப் பதிலாக சதீஸ் முனியாண்டி

1101
0
SHARE
Ad
சதீஸ் முனியாண்டி

ஜோர்ஜ் டவுன் – பினாங்கு மாநிலத்தில் மஇகா வழக்கமாகப் போட்டியிடும் இரண்டு சட்டமன்றத் தொகுதிகளில் ஒன்றான பாகான் டாலாம் தொகுதியில் இந்த முறை ஜசெக சார்பில் சதீஸ் முனியாண்டி போட்டியிடுகிறார்.

பினாங்கு துணை முதல்வர் பேராசிரியர் பி.இராமசாமியின் செயலாளராக இதுவரையில் சதீஸ் பணியாற்றி வந்தார்.

கடந்த 2 பொதுத் தேர்தல்களிலும் இந்தத் தொகுதியில் போட்டியிட்டு வென்ற ஏ.தனசேகரனுக்கு இந்த முறை வாய்ப்பு வழங்கப்படவில்லை. அவருக்கு பதிலாகத்தான் சதீஸ் முனியாண்டி நிறுத்தப்படுகிறார்.

#TamilSchoolmychoice

இன்று சனிக்கிழமை (21 ஏப்ரல் 2018) காலை பினாங்கு மாநிலத்திற்கான நாடாளுமன்ற, சட்டமன்றத் தொகுதிகளுக்கான ஜசெக வேட்பாளர்களின் பட்டியலை பினாங்கு முதல்வரும், ஜசெக தலைமைச் செயலாளருமான லிம் குவான் எங் அறிவித்தார்.

பினாங்கு மாநிலத்தில் 7 நாடாளுமன்றத் தொகுதிகளிலும், 19 சட்டமன்றத் தொகுதிகளிலும் ஜசெக போட்டியிடுகிறது. வேட்பாளர்களில் ஐவர் பெண்களாவர்.

பாகான் டாலாம் சட்டமன்றத் தொகுதியில் போட்டியிடப் போகும் மஇகா வேட்பாளர் யார் என்பது இதுவரை அறிவிக்கப்படவில்லை.