Home நாடு மைபிபிபி தலைவர் பதவியிலிருந்து கேவியஸ் விலகினார்!

மைபிபிபி தலைவர் பதவியிலிருந்து கேவியஸ் விலகினார்!

1436
0
SHARE
Ad

கோலாலம்பூர் – மைபிபிபி கட்சித் தலைவர் பதவியிலிருந்து தான் விலகுவதாக எம்.கேவியஸ் இன்று புதன்கிழமை அறிவித்திருக்கிறார்.

முன்னாள் தைப்பிங் நாடாளுமன்ற உறுப்பினரான டான்ஸ்ரீ எம்.கேவியஸ் தனது டுவிட்டரில் வெளியிட்டிருக்கும் தகவலில், தனது ராஜினாமா திங்கட்கிழமை முதல் அமலுக்கு வருவதாக குறிப்பிட்டிருக்கிறார்.

அதேவேளையில், மைபிபிபி பேராக் மாநில ஆலோசகர் மற்றும் கூட்டரசுப் பிரதேசத் தலைவர் ஆகிய பதவிகளையும் ராஜினாமா செய்துவிட்டதாகவும் கேவியஸ் தெரிவித்திருக்கிறார்.

#TamilSchoolmychoice

முன்னதாக செய்தியாளர்களிடம் பேசிய கேவியஸ், 14-வது பொதுத்தேர்தலில் சுயேட்சை வேட்பாளராகக் களமிறங்க யோசித்து வருவதாகத் தெரிவித்திருந்தார்.

கடந்த ஏப்ரல் 23, திங்கட்கிழமை, மைபிபிபி தலைவர் உட்பட முக்கியப் பொறுப்புகளில் இருந்து கேவியஸ் விலகியதற்கான பத்திரம்.

கேமரன் மலை நாடாளுமன்றத் தொகுதியை தனக்கு ஒதுக்கித் தரும் படி தேசிய முன்னணியிடம், கேவியஸ் நீண்ட நாட்களாகக் கோரிக்கை விடுத்து வந்தார்.

ஆனால், இறுதியில் அத்தொகுதியில் மஇகா இளைஞர் பிரிவுத் தலைவர் சி.சிவராஜா போட்டியிடுவார் என கடந்த ஞாயிற்றுக்கிழமை அறிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.