Home தேர்தல்-14 ராய்ஸ்: “விசாரிக்கப்பட்டாலும், விலக்கப்பட்டாலும், பக்காத்தானுக்கு பிரச்சாரம் செய்வேன்”

ராய்ஸ்: “விசாரிக்கப்பட்டாலும், விலக்கப்பட்டாலும், பக்காத்தானுக்கு பிரச்சாரம் செய்வேன்”

972
0
SHARE
Ad

கோலாலம்பூர் – அம்னோவிலிருந்து துன் டாயிம் சைனுடின், டான்ஸ்ரீ ரபிடா அசிஸ், டான்ஸ்ரீ ராய்ஸ் யாத்திம் (படம்) ஆகிய மூவரும் விலக்கப்பட்டதாக முதலில் வெளிவந்த அறிவிப்புகளைத் தொடர்ந்து ரபிடா, டாயிம் இருவர் மட்டுமே விலக்கப்பட்டதாகவும், ராய்ஸ் யாத்திம் ஒழுங்கு நடவடிக்கைக்காக விசாரிக்கப்படுகிறார் எனவும் அம்னோவின் தலைமைச் செயலாளர் தெங்கு அட்னான் தெங்கு மன்சோர் அறிவித்திருந்தார்.

அதைத் தொடர்ந்து, தான் துன் மகாதீருக்கும், பக்காத்தானுக்கும் வழங்கி வரும் ஆதரவை நிறுத்தப் போவதில்லை என்று அறிவித்துள்ளார் ராய்ஸ் யாத்திம். அதுமட்டுமின்றி விரைவில் ஜெம்போல் தொகுதியில் பக்காத்தான் கூட்டணிக்கு ஆதரவாக அவர் பிரச்சாரம் செய்யப் போகிறார் என்றும் ஊடகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேலும் தனக்கு இதுவரை அம்னோவிலிருந்து நீக்கும் கடிதம் எதுவும் கிடைக்கவில்லை என்றும் கூறியிருக்கும் ராய்ஸ், அடுத்த என்ன செய்வதென்று ஆலோசித்து வருவதாகக் கூறியிருக்கிறார்.

#TamilSchoolmychoice

காரணம், அம்னோ, சட்டபூர்வமான கட்சியல்ல என்றும், அந்தக் கட்சியிலிருந்து தான் விலக்கப்பட்டதால் விளைவுகள் என்ன என்பது குறித்து ஆராய்வதாகவும் ராய்ஸ் கூறியிருக்கிறார்.

முன்னாள் அமைச்சரான ராய்ஸ் பல தவணைகள் ஜெலுபு நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிட்டு வென்றவராவார். நெகிரி செம்பிலான் மாநில மந்திரி பெசாராகவும் பதவி வகித்திருப்பதால், அவரது பிரச்சாரம் நெகிரி மாநிலத்தில் பக்காத்தானுக்குக் கூடுதல் பலமாகப் பார்க்கப்படுகிறது.

ராய்ஸ் இதுவரையில் சமூக ஊடகங்கள் வழிதான் பக்காத்தானுக்கு ஆதரவாக கருத்துகள் வழங்கி வந்தார். எந்த தொகுதியிலும் மேடையேறி பிரச்சாரங்கள் மேற்கொள்ளவில்லை.

ஆனால், அம்னோவிலிருந்து விலக்கப்பட்ட ரபிடா, டாயிம் இருவரும் பல தொகுதிகளுக்கு சென்று மேடையேறி பக்காத்தானுக்கு ஆதரவாகப் பிரச்சாரங்கள் மேற்கொண்டு வருகின்றனர்.