Home தேர்தல்-14 சரவாக் தேசிய முன்னணியும் சிதைகிறது – ஆளுநர் மகாதீரைச் சந்தித்தார்

சரவாக் தேசிய முன்னணியும் சிதைகிறது – ஆளுநர் மகாதீரைச் சந்தித்தார்

1081
0
SHARE
Ad

கூச்சிங் – சபா மாநிலத்தில் தேசிய முன்னணியிலிருந்து ஒவ்வொரு கட்சிகளாக விலகிக் கொண்டிருக்கும் தருணத்தில் சரவாக் மாநிலமும் சில முக்கிய அரசியல் முடிவுகளை எடுக்கத் தொடங்கியிருக்கிறது.

சரவாக் மாநில ஆளுநர் துன் தாயிப் மாஹ்முட் வியாழக்கிழமை (10 மே) கோலாலம்பூர் வந்தடைந்து துன் மகாதீரையும், மகாதீரின் நெருங்கிய சகாவான துன் டாயிம் சைனுடினையும் சந்தித்ததாக சரவாக் மாநிலத்தின் துணை முதல்வர் ஜேம்ஸ் மாசிங் நேற்று உறுதிப்படுத்தியிருக்கிறார்.

தாயிப் மாஹ்முட் முன்னாள் முதலமைச்சர் என்பதோடு, சரவாக் மாநிலத்தை ஆளும் தேசிய முன்னணியில் முக்கிய அங்கம் வகிக்கும் பார்ட்டி பெசாக்கா பூமிபுத்ரா பெர்சாத்து கட்சியின் முன்னாள் தலைவருமாவார்.

#TamilSchoolmychoice

தாயிப் மாஹ்முட் கூச்சிங் திரும்பி சரவாக் முதலமைச்சர் அபாங் ஜொஹாரியுடன் சந்திப்பு நடத்துவார் என்றும் அதைத் தொடர்ந்து, அடுத்த வாரத்தில் தேசிய முன்னணியில் அங்கம் வகிக்கும் சரவாக் கட்சிகள் தேசிய முன்னணியில் நீடிப்பதா அல்லது பக்காத்தான் கூட்டணியில் சேருவதா என்ற முடிவை எடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பார்ட்டி பெசாக்கா பூமிபுத்ரா (13 நாடாளுமன்ற உறுப்பினர்கள்), பிஆர்எஸ் (3 நாடாளுமன்ற உறுப்பினர்கள்), எஸ்யுபிபி (1 நாடாளுமன்ற உறுப்பினர்), பிடிபி (2 நாடாளுமன்ற உறுப்பினர்கள்) ஆகிய நான்கு கட்சிகள் சரவாக் தேசிய முன்னணியில் அங்கம் வகிக்கின்றன.

இந்தக் கட்சிகள் அனைத்து இணைந்து ஒரே முடிவாக எடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தக் கட்சிகள் பக்காத்தான் கூட்டணியில் இணைந்தால், அதன் மூலம் மேலும் 19 கூடுதல் நாடாளுமன்ற உறுப்பினர்களின் பலம் பக்காத்தானுக்குக் கிடைக்கும் என்பதோடு, மூன்றில் இரண்டு பெரும்பான்மையையும் பக்காத்தான் நாடாளுமன்றத்தில் கொண்டிருக்கும் நிலைமை ஏற்படலாம்.