Home உலகம் டிரம்ப்-கிம் ஜோங் இடையிலான சிங்கப்பூர் சந்திப்பு இரத்து

டிரம்ப்-கிம் ஜோங் இடையிலான சிங்கப்பூர் சந்திப்பு இரத்து

857
0
SHARE
Ad

வாஷிங்டன் – அகில உலகமும் மிகவும் எதிர்பார்த்த அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றும் வட கொரிய அதிபர் கிம் ஜோங் இடையிலான சந்திப்பு இரத்து செய்யப்பட்டுள்ளது.

எதிர்வரும் ஜூன் 12-ஆம் தேதி இந்த சந்திப்பு சிங்கப்பூரில் நடைபெறவிருந்தது.

மே 24 தேதியிட்ட கடிதத்தின் வழி இந்த சந்திப்பை இரத்து செய்வதை தனது டுவிட்டர் பக்கத்தில் டிரம்ப் உறுதிப்படுத்தியிருக்கிறார்.

#TamilSchoolmychoice

கிம் ஜோங் நடவடிக்கைகள் சிலவற்றால் இந்த சந்திப்பை இரத்து செய்யும் நெருக்கடிக்குத் தான் ஆளானதாகக் குறிப்பிட்டிருக்கும் டிரம்ப், ‘நீங்கள் மனம் மாறினால் கண்டிப்பாக என்னை அழையுங்கள். அல்லது கடிதம் எழுதுங்கள். நாம் சந்திப்போம்’ என்றும் தெரிவித்திருக்கிறார்.